ச. சண்முகசுந்தரம்

ச. சண்முகசுந்தரம் (பிறப்பு: மே 9, 1940) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ப. சன்னியாசி, தாய் கௌரி அம்மாள். இந்திய வனப் பணி அதிகாரியான இவர் தமிழ்நாடு அரசு வனத்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "தமிழ்நாட்டுத் தாவரங்கள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சண்முகசுந்தரம்&oldid=3614065" இலிருந்து மீள்விக்கப்பட்டது