கொம்பு (இசைக்கருவி)

கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் காற்று இசைக்கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது.

கொம்பு

கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.[1] தற்போது வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களில் கொம்பு செய்யப்படுகிறது. பித்தளையால் செயபட்ட கொம்பைவிட வெண்கல வார்பினால் செய்யப்பட்ட கொம்பில் ஒலி அதிர்வு கூடுதலாக இருக்கும். இரண்டு பாகங்களை பொருத்தி வாசிக்கப்படும் கொம்பு ஆங்கில எழுத்தான S வடிவத்தில் வைத்து வாசிக்க முடியும். அதே போல அதை மேல் நோக்கி திருப்பி அரைவட்ட வடிவிலும் வாசிக்க முடியும்.[2]

கொம்பு இசைக் கருவி சுமார் நான்கு முதல் ஆறு அடிவரை இருக்கும். இதை இசைக்கும் கலைஞர்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அடிவயிற்றில் இருந்து ஊதுவதன் மூலம் யானை பிளிறுவது போன்ற ஓசை கொம்பில் உருவாகிறது. அக்காலத்தில் மன்னர் வெளியே வந்தாலும், போரில் வெற்றி பெற்றாலும் கொம்பு ஊதப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான கொம்பு தற்போது சில கோயில் விழாக்களில் மட்டுமே வாசிக்கப்படுகிறது. இந்தக் கருவியை வாசிக்கும் கலைஞர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.[2]

இவற்றையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம்.
  2. 2.0 2.1 ஆசாத் (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். p. 24.
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்பு_(இசைக்கருவி)&oldid=3887577" இலிருந்து மீள்விக்கப்பட்டது