முதன்மை பட்டியைத் திறக்கவும்
வீதியில் மகுடி வாசிக்கும் பாம்பாட்டி ஒருவர்

பாம்பாட்டிகள் பயன்படுத்தும் ஒரு மரபுவழி இசைக்கருவி இதுவாகும். இது துளைக்கருவிகள் அல்லது காற்று இசைக்கருவிகள் வகையைச் சேர்ந்தது.

வரலாறுதொகு

மகுடி இந்தியாவில் தோற்றம்பெற்ற ஒரு பண்பாட்டு இசைக்கருவி ஆகும். சமயச் சடங்குகளில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் கிராமிய இசையிலும் பாம்பாட்டிகளாலும் பன்னெடுங்கலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. [1]

கருவி அமைப்புதொகு

 
நீர் பூசனியால் செய்யப்பட்ட மகுடி
 
மகுடி.

உலர்ந்த நாடங்காய் (bottle gourd) இதற்குப் பயன்படும். நாடங்காயின் கழுத்துப் பகுதி நீக்கப்பட்டு அதில் மூங்கில் குழல்கள் பொருத்தப்படும். இசையை ஏற்படுத்தக் கூடியவாறு ஏழு துளைகள் வரை குழலில் இடப்படும். இடைவெளிகள் தேன்மெழுகு மூலம் காற்றிறுக்கமாக மூடப்படும்.[1]

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுடி&oldid=1856725" இருந்து மீள்விக்கப்பட்டது