சுரைக்குடுக்கை

சுரைக்குடுக்கை என்பது முற்றி, காய்ந்த உள்ளீடற்றுப்போன சுரைக்காயின் கூட்டைக் குறிப்பதாகும். இது கிராமங்களில் பலவிதமாக பயன்படுத்தப்படும் பொருளாகும். இது பண்டைய காலத்தில் தமிழர்களின் ஒரு இன்றியமையாத வீட்டு உபயோகப்பொருளாக இருந்துள்ளது. சுரைக்காய் நன்கு முற்றிய பிறகு அதனை எடுத்து நன்றாக உலர்த்தி, பின் அதன் காம்புப் பகுதியில் துவாரம் ஒன்றை ஏற்படுத்துவர். அதற்குள் உள்ள விதைளை வெளியில் எடுத்துவிட்டு உள்ளீடற்று காலியாக உள்ள அந்த காய்ந்த சுரைக்காயை ஒரு கொள்கலனாக பயன்படுத்துவர்.[1] இதில் ஒரு கம்பை இணைத்து துந்தனா என்ற கம்பி இசைக்கருவியும், மகுடி இசைக்கருவி உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் செய்யப்படுகின்றன. சுரைக்குடுக்கை மீது சற்று இடைவெளிவிட்டு கயிற்றால் வலைபோல கட்டி அதை சிறுவர்களின் முதுகில் கட்டி நீர்நிலைகளில் நீச்சல் பழக்குவர்.[2]

பதப்படுத்தி வர்ணம் பூசப்பட்ட சுரைகுடுக்கை
சுரைகுடுக்கையால் செய்யப்பட்ட மகுடி வாசிக்கும் ஒரு பாம்பாட்டி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரைக்குடுக்கை&oldid=4159662" இலிருந்து மீள்விக்கப்பட்டது