புலி ஆட்டம்
புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர்.[1] இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது.
புலி ஆட்டத்தை ஒத்து, கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்களும் உண்டு.
- பரணி பரணி
- இதனைப் பரணி என்னும் பெயருடன் கார்த்திகை ஒளிவிளக்குத் திருநாளுக்கு முதல்நாள் பரணிநாளில் விளையாடுவர்.
- வால்புலி
- புலியின் வால் நீண்டதாகக் கட்டப்பட்டு அதனை வால்பிடிப்பவர் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் ஓட விளையாடுதல் இதன் நாட்டுப்புற விளையாட்டு ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
உசாத்துணை
தொகு- கே. தனசேகரன். (2006). கிராமியக் கலைகள். சென்னை: திருவரசு புத்தக நிலையம்.
- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980