இசைக்கருவி

veenai
(இசைக் கருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசைக்கருவிகள் (About this soundஒலிப்பு ) இசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு பெறச்செய்வதற்கும், நடனக்கச்சேரிகளில் மேலும் மெருகூட்டுவதற்கும் பயன்படுகின்றன. இசையொலியின் (நாதம்) பல நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும், இசையறிவில் வளர்ந்து இசையின் அழகைத் துய்ப்பதற்கும், சிறப்பாக மொழி கலவாத் தனியிசையின் (absolute music) மேன்மையை உணர்வதற்கும் இவை பெரிதும் பயன்படுகின்றன.[1][2][3]

இசைக் கருவிகளை வாத்தியக்கருவிகள் எனவும் அழைப்பர்.

இசைக்கருவிகளின் வகைகள் தொகு

இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை:

  1. நரம்புக் கருவிகள் (தந்தி வாத்தியங்கள் - chordophones). யாழ், தம்புரா, வீணை, வயலின், கோட்டு வாத்தியம் ஆகியன நரம்புக் கருவிகள்.
  2. துளைக் கருவிகள் (காற்று வாத்தியங்கள் - aerophones). புல்லாங்குழல், நாதசுரம், கிளாரினெட் முதலியவை துளைக்கருவிகள்.
  3. தோற்கருவிகள் (அவனத அல்லது கொட்டு வாத்தியங்கள் - membranophones). தவில், மிருதங்கம், கஞ்சிரா, பறை முதலியவை தோற்கருவிகள்.
  4. கன கருவிகள் (கஞ்சக் கருவிகள் (idiophones அல்லது autophones). ஜால்ரா, குழித்தாளம், ஜலதரங்கம் முதலியவை கனகருவிகள்.

அரங்கிசையில் வாசிக்கப்படும் முக்கிய கருவிகள் தொகு

அரங்கிசையில் வாசிக்கப்படும் துணைக்கருவிகள் தொகு

கிராமிய இசைக்கருவிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Montagu 2007, ப. 1
  2. Rault 2000, ப. 9
  3. Blades 1992, ப. 34

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைக்கருவி&oldid=3768868" இருந்து மீள்விக்கப்பட்டது