ஏ. எஸ். பொன்னம்மாள்

AS.Ponnammal.jpg

ஏ.எஸ்.பொன்னம்மாள் (இறப்பு: 24.11.2015)[1][2] இவர் ஒரு தமிழக அரசியல்வாதி. சமூக சேவகர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு , இந்திய தேசிய காங்கிரசு , தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பாகவும் தனித்தும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் , பழநி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் - 1957 , 1962 , 1967, 1971 , 1980 , 1984 , 1989 , 1991 மற்றும் 1996 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]

விருதுதொகு

தமிழக அரசின் 2006ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது.[6][7][8]

மறைவுதொகு

உடல் நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏ.எஸ். பொன்னம்மாள் (வயது 86) 24 நவம்பர் 2015 அன்று காலமானார்.[9]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எஸ்._பொன்னம்மாள்&oldid=2707370" இருந்து மீள்விக்கப்பட்டது