முதன்மை பட்டியைத் திறக்கவும்

இயன் போத்தம்

இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர்

இயன் போத்தம் என்பவர் துடுப்பாட்ட விமர்சகரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றின் தலைசிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் வலது-கை மட்டையாளராகவும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராகவும் இருந்துள்ளார். பன்முக ஆட்டக்காரராக இவர் படைத்த பல்வேறு சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளன.

இயன் போத்தம்
Ian Botham headshot.jpg
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் இயன் டெரன்சு போத்தம்
வகை பன்முக ஆட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலது-கை
பந்துவீச்சு நடை வலது கை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 474) 28 சூலை, 1977: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு 18 சூன், 1992: எ பாக்கித்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 33) 26 ஆகத்து, 1976: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி 24 ஆகத்து, 1992:  எ பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1974–1986 சோமர்செட்
1987/88 குயின்ஸ்லாந்து
1987–1991 வொர்செஸ்டர்சயர்
1992–1993 டர்ஹாம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒருநாள்முதல் தரம்பட்டியல் அ
ஆட்டங்கள் 102 116 402 470
ஓட்டங்கள் 5,200 2,113 19,399 10,474
துடுப்பாட்ட சராசரி 33.54 23.21 33.97 29.50
100கள்/50கள் 14/22 0/9 38/97 7/46
அதிக ஓட்டங்கள் 208 79 228 175*
பந்து வீச்சுகள் 21,815 6,271 63,547 22,899
இலக்குகள் 383 145 1,172 612
பந்துவீச்சு சராசரி 28.40 28.54 27.22 24.94
சுற்றில் 5 இலக்குகள் 27 0 59 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 4 0 8 0
சிறந்த பந்துவீச்சு 8/34 4/31 8/34 5/27
பிடிகள்/ஸ்டம்புகள் 120/– 36/– 354/– 196/–

22 August, 2007 தரவுப்படி மூலம்: CricketArchive

இவர் 21 தேர்வுப் போட்டிகளில் 1000 ஓட்டங்கள் எடுத்ததுடன் 100 மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் துடுப்பாட்ட வரலாற்றின் அதிவேகப் பன்முக ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். மேலும் தேர்வுப் போட்டிகளில் ஒரே ஆட்டப் பகுதியில் 5 மட்டையாளர்களை வீழ்த்தி 100 ஓட்டங்கள் எடுத்த சாதனையை 5 முறை நிகழ்த்திய ஒரே வீரர் இவர் மட்டுமே. 15 பிப்ரவரி 1980ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தின் போது ஒரு போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்ததுடன் 13 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் என்ற உலகச் சாதனையைப் படைத்தார்.

வறியோர்க்கு இயன் போத்தம் ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் 2007ஆம் ஆண்டு அவருக்கு வீரப்பெருந்தகை பட்டம் வழங்கப்பட்டது. இவர் 2009ஆம் ஆண்டு ஐசிசியின் புகழவையில் இடம்பெற்றார்.

இயன் போத்தம் செஷயரில் உள்ள எஸ்வாலில் பிறந்தார். இவரின் பெற்றோர் ஹெர்பர்ட் லெஸ்லி போத்தம் மற்றும் வயலட் மேரி ஆவர். இவரின் தந்தை இருபது ஆண்டுகள் விமானப் படையில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போதும் இவர் விமானப் படை வீரராக இருந்தார். இவரின் தாய் செவிலியர் ஆவார். போத்தமிற்கு இரண்டு வயதாக இருக்கும் போது இவரின் தட்ந்ஹைக்கு வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்ஸ் சில் பொறியாளராகப் பணி கிடைத்ததால் இவர்கள் யோவில்லிற்கு சென்றனர்.  இவரின் பெற்றோர் இருவருமே துடுப்பாட்ட வீரர்கள் ஆவர். இவரின் தந்தை வெஸ்ட்லேண்ட் அணிக்கும் தாய் ஷெர்போன் அணியிலும் விளையாடினர்.  பள்ளிக் காலத்திற்கு முன்பாகவே இவருக்கு துடுப்பாட்டம் மீது ஆர்வம் இருந்துள்ளது. பள்ளிக் காலத்தில் யோவிலில் உள்ள கிராமர் பள்ளியின் சுற்றுச் சுவரின் மீது ஏறி அங்கு மற்றவர்கள் துடுப்பாட்டம் விளையாடியதனைப் பார்த்துள்ளார். இவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது பந்தினை வைத்து பந்துவீச்சு பயிற்சி எடுத்துள்ளார்.

தனது பள்ளிக் காலங்களில் ஒன்பது வயதாக இருக்கும் போது இவர் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து ஆகிய இரண்டு விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார்.

சர்வதேச போட்டிகள்தொகு

போத்தம் 102 தேர்வுத் துடுப்பாட்ட்ப் போட்டிகளில் விளாஇயாடியுள்ளாஅர். அதில் 5,200 ஓட்டங்களை 33.54 எனும் சராசரியோடு எடுத்தார். அதில் அதிக பட்சமாக 208 ஓட்டங்களை எடுத்தார். அதில் 14 நூறுகளும் அடங்கும். பந்துவீச்சில் 383 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். அவரின் பந்துவீச்சு சராசரி 28.40 ஆக இருந்தது. அதில் 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பது வீச்சு ஆகும். மேலும் ஒரு போட்டியில் 10இலக்குகளை நான்குமுறை வீழ்த்தியுள்ளார். மேலும் 120 கேட்ச் பிடித்துள்ளார்.

1976 முதல் 1992 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குறைந்த பட்ச ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இவர் 2,113 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 79 ஓட்டங்கள் எடுத்ததே அதில் அதிகபட்சம் ஆகும். பந்துவீச்சில் 145 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். மேலும் 36 கேட்சுகளையும் பிடித்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் குறைந்த பட்ச ஓவர்கள் ஆகிய இரு போட்டிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் குறைந்த பட்ச ஓவர்களில் சிறப்பாக விளையாடவில்லை. இருந்தபோதிலும் சில போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடியுள்ளார். அதில் ஆரு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றுள்ளார். போத்தம் 1979, 1983 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிணக் கோப்பையில் விளையாடியுள்ளார். அதில் 22 போட்டிகளில் விளையாடியுள்ளாஅர். அதில் அ979 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளும் அடங்கும். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி அரை இறுதியிடன் வெளியேறிய அணியிலும் இவர் விளையாடினார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருமுறை 1,000 ஓட்டங்களும் 100 இலக்குகளையும் கைப்பற்றிய 21 ஆவது சர்வதேச வீரர் ஆவார். இவர் மொத்தமாக 5,200 ஓட்டங்களையும் 383 இலக்குகளையும் கைப்பற்றினார்.மேலும் 1220 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_போத்தம்&oldid=2815089" இருந்து மீள்விக்கப்பட்டது