பாக்கித்தான் மக்கள் கட்சி

பாக்கித்தான் மக்கள் கட்சி (Pakistan Peoples Party, உருது: پاکستان پیپلز پارٹی), சுருக்கமாக பி॰பி॰பி॰, பாக்கித்தானின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். சோசலிச மக்களாட்சி இதன் கொள்கையாகும். நவம்பர் 30, 1967 அன்று சுல்பிக்கார் அலி பூட்டோவின் தலைமையில் இக்கட்சித் தொடங்கப்பட்டது.[1] இக்கட்சியின் தலைவர்களாக பூட்டோ குடும்பத்தினரே (அவரது மருமகன் சர்தாரி குடும்பத்தினர்) இருந்து வந்துள்ளனர். பூட்டோ குடும்பத்தினரின் சிந்து மாகாணத்தில் வலுவான மக்களாதரவைக் கொண்டுள்ள இந்த கட்சி பஞ்சாப், பலுசிஸ்தான், கைபர் பக்தூன், கில்கித் ஆகிய பகுதிகளிலும் வலுவாக உள்ளது. தற்போது இந்தக் கட்சி பாக்கித்தானின் நடுவண் அரசில் ஆளும் கட்சியாக உள்ளது. தற்போதைய கட்சித்தலைவராக பாக்கித்தானிய சனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரியும் அவரது மகன் பிலாவல் பூட்டோ சர்தாரியும் இணையாக உள்ளனர்.[2]

பாக்கித்தான் மக்கள் கட்சி
پاکستان پیپلز پارٹی
தலைவர்பிலாவல் பூட்டோ சர்தாரி மற்றும் ஆசிஃப் அலி சர்தாரி
தொடக்கம்நவம்பர் 30,1967
தலைமையகம்மத்திய செயலகம்
சட்டப்பேரவைக் குடியிருப்புக்கள்
இசுலாமாபாத், பாக்கித்தான்
கொள்கைசோசலிச மக்களாட்சி
பன்னாட்டு சார்புசோசலிஸ்ட் இன்டர்நேசனல்
இணையதளம்
www.ppp.org.pk

இவற்றையும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Benazir Bhutto, Sean Stewart Price, Heinemann-Raintree Library, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781432932220, ... This disgusted Benazir's father, Zulfikar Bhutto. He resigned from the government in 1966. Sensing Ayub's unpopularity, he set up his own political party, called the Pakistan People's Party (PPP), in 1967 ...
  2. Zulfikar Ali Bhutto and Pakistan, 1967-1977, Rafi Raza, Oxford University Press, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195776973