சிமித்சன் டெனண்ட்

சிமித்சன் டெனண்ட் (Smithson Tennant, 30 நவம்பர் 1761[1] - 22 பெப்ரவரி 1815)[2] என்பவர் ஓர் ஆங்கிலேய வேதியியலாளர் ஆவார்.

Smithson Tennant in Finkle Street, Selby

இரிடியம் மற்றும் ஓசுமியம் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்து இவர் புகழ் பெற்றார். 1803 ஆம் பிளாட்டினம் தாதுவின் எச்சங்களில் இருந்து இத்தனிமங்களை இவர் கண்டறிந்தார். வைரம் மற்றும் விறகுக்கரி ஆகியவற்றின் அடையாளங்களை நிருபித்தவர் என்ற வகையிலும் இவர் பங்காற்றியுள்ளார். டெனண்டைட் என்ற கனிமம் இவரால் கண்டுபிடிக்கப் பட்டதாலேயே அப்பெயர் பெற்றது.

இங்கிலாந்து யாக்சையரில் உள்ள செல்பையில் டெனண்ட் பிறந்தார். தந்தையின் பெயர் கால்வெர்ட் டெனண்ட் ஆகும். இரண்டாம் பேரான் பால்டிமோர் என்ற பட்டம் பெற்ற செசிலசு கால்வெர்ட்டின் பெயர்த்தி பில்லிசு கால்வெர்ட்டிடம் இருந்து கால்வெர்ட் டெனண்ட்டுக்கு இப்பெயர் வந்தது. சிமித்சன் டெனண்ட்டுக்கு சிமித்சன் என்ற பெயர் அவருடைய பாட்டியின் பெயரான ரெபெக்கா சிமித்சன் என்ற பெயரில் இருந்து தருவிக்கப்பட்டது ஆகும். இவர் யோசுவா இட்சிலிங்கின் விதவை மனைவியாவார். யாக்சையரில் இருந்த பெவர்லி இலக்கணப் பள்ளிக்கூடத்தில் இவர் கல்வி கற்றார். தற்போது அப்பள்ளியின் நுழைவுவாயில் ஒன்றில் அவருடைய இரு கண்டுபிடிப்புகளான இரிடியம் மற்றும் ஓசுமியத்தை நினைவுகூறும் வகையில் தகடொன்று பொதிக்கப்பட்டுள்ளது. 1781 ஆம் ஆண்டில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க ஆரம்பித்த இவர், சிலமாதங்களில் கேம்பிரிட்ச் சென்றார். அங்கு தாவரவியல் மற்றும் வேதியியலுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தார். 1796 ஆம் ஆண்டில்[3] கேம்பிரிட்சில் பட்டம்பெற்ற அதே நேரத்தில் செட்டார் அருகே ஒரு பண்ணையை வாங்கி அதில் விவசாய ஆய்வுகள் மேற்கொண்டார். 1813 ஆம் ஆண்டில் கேம்பிரிட்சில் வேதியியல் பேராசியராக நியமிக்கப்பட்டார். பணியாற்றத் தொடங்கிய சிறிது காலத்திலேயே[4] அவர் போலோன் அருகே ஒரு பாலத்தில் பயணம் செய்தபொழுது விபத்தில் காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

Mary D. Archer, Christopher D. Haley. The 1702 Chair of Chemistry at Cambridge. Cambridge, 2005, ISBN 0-521-82873-2, ISBN 978-0-521-82873-4.

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமித்சன்_டெனண்ட்&oldid=3641677" இலிருந்து மீள்விக்கப்பட்டது