டேனியல் நோபோவா

டேனியல் ராய் கில்கிறிஸ்ட் நோபோவா அசின் (Daniel Roy Gilchrist Noboa Azín) (பிறப்பு 30 நவம்பர் 1987) எக்குவடோர் வணிக நிர்வாகி, அரசியல்வாதி மற்றும் வாழைத்தொழிலில் தொழிலதிபர் ஆவார். இவர் 2023 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எக்குவடோர் தேர்வு அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1] [2] 35 வயதான இவர், நாட்டின் வரலாற்றில் மிக இளைய அரசுத் தலைவராக இருப்பார். [3] [4]

டேனியல் நோபோவா
2022-இல் நோபோவா
எக்குவடோரின் அரசுத்தலைவர்
பதவியில்
25 நவம்பர் 2023
துணை அதிபர்வெரோனிகா அபாடு ரோஜாஸ் (தேர்வு)
Succeedingகியெர்மோ லாசோ
எக்குவடோரின் தேசிய சட்டமன்ற உறுப்பினர்
சாந்தா எலினா மாகாணத்திலிருந்து
பதவியில்
14 மே 2021 – 17 மே 2023
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
டேனியல் ராய் கில்கிறிஸ்து நோபேவோ அசின்

30 நவம்பர் 1987 (1987-11-30) (அகவை 36)
உவயாகில், எக்குவடோர்
அரசியல் கட்சிதேசிய ஜனநாயக நடவடிக்கைக் கட்சி (எக்குவடோர்) (2022–தற்போது)
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய எக்குவடோரியன் (2022-இற்கு முன்னதாக)
துணைவர்(கள்)
கேப்ரியலா கோல்ட்பாம்
(தி. 2018; விவாகரத்து 2021)

லாவினியா வால்போனெசி (தி. 2021)
பிள்ளைகள்2
பெற்றோர்அல்வாரோ நோபோவா
அனபெல்லா அசின்
கல்விநியூயார்க்கு பல்கலைக்கழகம் (இளங்கலை வணிக நிர்வாகம்)
நார்த்-வெஸ்டர்ன் பல்கலைக்கழகம்(முதுகலை வணிகவியல் நிர்வாகம்)
ஆர்வார்டு கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட் (முதுகலை பொது நிர்வாககம்)
ஜியார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் (முதுகலைப் பட்டம்)

இவர் 2021 மற்றும் 2023 க்கு இடையில் எக்குவடோர் தேசிய சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். அப்போது அரசுத் தலைவர் கியெர்மோ லாசோவால் செயல்படுத்தப்பட்ட மியூர்டே க்ருசாடா வழிமுறையைத் தொடர்ந்து தேசிய சட்டமன்றம் கலைக்கப்பட்டது. இவரது அரசியல் வாழ்க்கைக்கு முன், நோபோவா தனது தந்தை அல்வாரோ நோபோவால் நிறுவப்பட்ட ஒரு ஏற்றுமதி வணிகமான நோபோவா கழகத்தில் பல பதவிகளில் பணியாற்றினார், இவர் எக்குவடோர் அரசுத் தலைவர் தேர்தல்களில் ஐந்து முறை தோல்வியுற்றார். இவர் தனது தந்தையின் நிறுவனத்திற்கும் மற்றும் நல்வாய்ப்பிற்கும் வாரிசாக பரவலாக விவரிக்கப்படுகிறார். [5]

மே 2023 இல், நோபோவா 2023 ஜனாதிபதிக்கான உடனடித் தேர்தலில் வேட்புமனுச் செய்வதாக அறிவித்தார். ஈக்வடாரின் தேசிய ஜனநாயகச் செயல் அணியினால் அளிக்கப்பட்ட வாய்ப்பின் கீழ் இவர் போட்டியிட்டார். இவர் அக்டோபரில் உடனடித் தொடர் தேர்தலுக்கு முன்னேறினார், லூயிசா கோன்சலஸை எதிர்கொண்டார். இது தேர்தலுக்கு முந்தைய நாட்களில் அவருக்கான குறைந்த வாக்கு எண்ணிக்கை வருமோ என்ற அச்சத்தைத் தந்தது.

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

டேனியல் ராய்-கில்கிறிஸ்ட் நோபோவா அசின் நவம்பர் 30, 1987 இல் உவயாகில் நகரில் பிறந்தார். இவர் தொழிலதிபர் அல்வாரோ நோபோவா மற்றும் மருத்துவர் அனபெல்லா அசின் ஆகியோரின் மகன். [6]

நியூயார்க் பல்கலைக்கழக ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் படித்த பிறகு, [7] இல் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார்.

2019-ஆம் ஆண்டில், நோபோவா இல்லினாய்ஸின் எவன்ஸ்டனில் உள்ள கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் முதுகலை வணிக நிர்வாகம் பட்டத்தைப் பெற்றார். [8] 2020-ஆம் ஆண்டில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார். [8] பின்னர், 2022 இல், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் தகவல் தொடர்பு மற்றும் தந்திரோபாய நிர்வாகத்தில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார். [8]

தொழில்

தொகு

வணிகம்

தொகு

18 வயதில், இவர் தனது சொந்த நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் குழுவை நிறுவினார். [6]

இவரது தந்தை அல்வாரோ நோபோவா, வாழைப்பழ ஏற்றுமதியாளரான நோபோவா கார்ப்பரேஷனை வைத்திருக்கிறார். [5] இவர் நிறுவனத்தின் வாரிசாக பார்க்கப்படுகிறார். [5] நோபோவா கார்ப்பரேஷனின் கப்பல் இயக்குநராகப் பணியாற்றியவர். [6] இவர் 2010 [9] மற்றும் ஜூன் 2018 [6] க்கு இடையில் வணிக மற்றும் தளவாட இயக்குநராகவும் இருந்தார்.

பனாமா ஆவணங்களின்படி, பனாமாவில் அமைந்துள்ள இரண்டு கடல்சார் நிறுவனங்களின் உரிமையாளர் நோபோவா என்பதை 2023 அக்டோபரில் பிரேசிலிய நாளிதழ் ஃபோல்ஹா டி எஸ் பாவ்லோ வெளிப்படுத்தியது. [10] இவர் தனது தந்தைக்கு சொந்தமான பல நிறுவனங்களுடன் தொடர்புடையவர். [10] ஈக்வடார் சட்டமானது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வரிக்குறைப்பு தடை செய்கிறது. [10]

அரசியல்

தொகு
 
ஏப்ரல் 2022 இல் நோபோவா

ஐக்கிய எக்குவடோர் அரசியல் இயக்கத்திற்காக சாண்டா எலெனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 2021 சட்டமன்றத் தேர்தலில் நோபோவா தேசிய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [11] இவர் அதே ஆண்டு மே 14 அன்று பதவியேற்றார். அதே மே மாதம், அவர் பொருளாதாரம், உற்பத்தி மற்றும் குறுந்தொழில் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரானார். [12] இவரது அரசியல் சித்தாந்தம் மையவாதம் மற்றும் மைய-வலது வாதம் என்ற அளவில் விவரிக்கப்பட்டுள்ளது. [13] [14]

மார்ச் 2023 இல், கியெர்மோ லாசோவின் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட முதலீட்டுச் சட்டத்தை நிராகரித்து தாக்கல் செய்ததை எதிர்கொண்டு, இவர் மியூரெட் குரூசுவாடா விற்கு ஆதரவாக இருந்தார். [15] 17 மே 2023 அன்று, லாஸ்ஸோ மியூர்ட் க்ரூஸாடாவைத் தூண்டி, தேசிய சட்டமன்றத்தைக் கலைத்து, நோபோவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. [16]

2023 அரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரம்

தொகு
 
2023 தேர்தலின் முதல் சுற்றில் நோபோவின் செயல்திறன்

அதைத் தொடர்ந்து, மே 2023 இல், அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், அதே ஆண்டு அரசுத் தலைவர் தேர்தலுக்கான முன்-வேட்பாளராக, அரசியல் இயக்கமான தேசிய ஜனநாயக நடவடிக்கை (ADN), [7] மற்றும் மேலும் சில இயக்கங்களான மக்கள், சமத்துவம் மற்றும் ஜனநாயகம் (PID), மற்றும் மோவெர் [1] ஆகியவற்றால் இவர் ஆதரிக்கப்படுகிறார். இவரது துணையாக இருந்தவர் தொழிலதிபர் வெரோனிகா அபாத் ரோஜாஸ். [17] இவரது பிரச்சாரம் வேலை உருவாக்கம், புதிதாக நிறுவப்பட்ட வணிகங்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் வரி ஏய்ப்பாளர்களுக்கான குற்றவியல் தண்டனைகளை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. [18] வளர்ந்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் நாட்டில் நீதி அமைப்பை மேம்படுத்தவும் இவர் உறுதியளித்துள்ளார். [18]

சூலை மாதத்தில் நடந்த இரண்டு தேர்தல்களில், இவர் 6.4% மற்றும் 3.1% வாக்குகளைப் பெற்றார். [19] [20] ஆகத்து தொடக்கத்தில், நோபோவாவிற்கு 2.5% மற்றும் 3.7% வாக்குகள் பதிவாகின. [21] தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அவர் 3.3% வாக்குகளைப் பெற்றிருந்தார். [22]

ஆகத்து 20 அன்று, நோபோவா 23.47% வாக்குகளைப் பெற முடிந்தது. மேலும், அக்டோபர் 15 ஆம் தேதி லூயிசா கோன்சாலஸை எதிர்கொண்ட இரண்டாவது தேர்தலுக்கு முன்னேறினார். இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது ஆச்சரியமானதாகக் கருதப்பட்டது, சிலர் இவர் கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தததே இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். [18] நோபோவா தனது வெற்றிக்கு இளம் வாக்காளர்கள் அளித்த ஆதரவினைப் பாராட்டினார்.

இரண்டாவது சுற்றில், நோபோவா 52% வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். [23] 35 வயதில், இவர் எக்குவடோர் வரலாற்றில் இளைய அரசுத்தலைவராக இருப்பார் (மற்றும் உலகின் இரண்டாவது இளைய அரசுத் தலைவரும் ஆவார்), 1979-ஆம் ஆண்டில் 38 வயதில் அரசுத் தலைவராக பதவியேற்ற ஜெய்ம் ரோல்டோஸ் அகுலேராவை விட இளையவர் ஆகிறார். [24] இவரது வெற்றியைத் தொடர்ந்து, நோபோவா "ஒரு புதிய அரசியல் திட்டம், ஒரு இளம் அரசியல் திட்டம், நிகழ்வதற்கு சாத்தியமற்ற ஒரு அரசியல் திட்டம் என்று வருணிக்கப்பட்ட அரசியல் திட்டம்" ஆகியவற்றை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். [23] இவர் "நாட்டில் அமைதி திரும்பவும், இளைஞர்களுக்கு மீண்டும் கல்வி கொடுக்கவும் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் முடியும்" என்று உறுதியளித்தார். [23]

அரசுத்தலைவர் பதவி

தொகு

நோபோவா 25 நவம்பர் 2023 அன்று அரசுத்தலைவராகப் பதவியேற்பார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

13 ஜனவரி 2018 அன்று, இவர் கேப்ரியலா கோல்ட்பாமை மணந்தார், [25] இத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருந்தாள். [26] இவர்கள் பின்னர் விவாகரத்து செய்தனர். [26] சூன் 2021 இல், விவாகரத்துச் செயல்பாட்டின் போது கோல்ட்பாம் பயன்படுத்திய தரவுகளுக்காக, தனியுரிமை மற்றும் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையை மீறியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக காப்பீட்டாளர் மேஃப்ரே மீது விசாரணை செய்வதற்காக ஸ்பெயின் நீதிமன்றத்தில் நோபோவா தாக்கல் செய்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [27] [28]

2019 ஆம் ஆண்டில் இவர் சமூக ஊடக செல்வாக்கு மிக்க லவினியா வால்போனேசியை சந்தித்தார். [29] இவர் [30] ஆகத்து 2021 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். [8] அக்டோபர் 2023 இல், நோபோவாவும் வால்போனேசியும் பிப்ரவரி 2024 இல் தங்கள் இரண்டாவது மகனை எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.[31]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Otra vez Álvaro Noboa quiere ser presidente y ahora competiría hasta con su hijo" (in ஸ்பானிஷ்). 30 May 2023. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  2. "Daniel Noboa, presidente electo de Ecuador con el 87% de actas escrutadas" (in es). 15 October 2023. https://www.metroecuador.com.ec/noticias/2023/10/16/daniel-noboa-el-presidente-electo-de-ecuador-con-el-87-de-actas-escrutadas/. 
  3. 3.0 3.1 "Daniel Noboa elected Ecuador's youngest president". 15 October 2023. https://www.bbc.com/news/world-latin-america-67119415.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "BBC" defined multiple times with different content
  4. "Noboa wins Ecuador presidential race, pledges to rebuild country". 15 October 2023. https://www.reuters.com/world/americas/ecuadoreans-weigh-economic-security-pledges-presidential-ballot-2023-10-15/. 
  5. 5.0 5.1 5.2 "Banana tycoon's son pulls off upset in Ecuador president race". Columbian. பார்க்கப்பட்ட நாள் 22 August 2023. பிழை காட்டு: Invalid <ref> tag; name "banana" defined multiple times with different content
  6. 6.0 6.1 6.2 6.3 "Daniel Noboa anuncia su candidatura a la presidencia: "Soy un hombre de proyectos que no se rinde"" (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 31 May 2023. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":0" defined multiple times with different content
  7. 7.0 7.1 Redacción (24 May 2023). "Elecciones Ecuador 2023: Daniel Noboa Azín buscará por primera vez la Presidencia de Ecuador, que su padre Álvaro Noboa no logró en cinco intentos" (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 31 May 2023. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":3" defined multiple times with different content
  8. 8.0 8.1 8.2 8.3 "¿Quién es Daniel Noboa?". 25 May 2023. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":1" defined multiple times with different content
  9. "Daniel Roy Noboa Azin". பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  10. 10.0 10.1 10.2 "Pandora papers: Daniel Noboa posee empresas en paraísos fiscales" (in Spanish). 13 October 2023. பார்க்கப்பட்ட நாள் 16 October 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  11. "La renovación política de los Noboa Azín comienza en Santa Elena" (in மெக்ஸிகன் ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  12. "Legisladores manabitas en comisiones permanentes de Asamblea Nacional del Ecuador" (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  13. "Daniel Noboa, candidato presidencial: Se pueden hacer las reformas base el primer año, y luego la persona que esté sentada ahí, que seguro seré yo, puede buscar la reelección" (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 21 August 2023.
  14. "Ecuador elects centre-right business heir Daniel Noboa as president". https://www.ft.com/content/f4c3f997-2c4c-44f3-b656-57af3a5ac308. 
  15. "Asambleísta Daniel Noboa dice que se debe llamar a muerte cruzada" (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  16. "Ecuador's president dissolves National Assembly". https://www.dw.com/en/ecuadors-president-dissolves-national-assembly/a-65662321. 
  17. "Segunda vuelta Ecuador 2023: ¿Quién es Verónica Abad, la compañera de fórmula de Daniel Noboa?" (in Spanish). 22 August 2023. பார்க்கப்பட்ட நாள் 22 August 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  18. 18.0 18.1 18.2 "Factbox-Ecuador's Gonzalez and Noboa go to second round in presidential vote". 21 August 2023. பார்க்கப்பட்ட நாள் 21 August 2023.
  19. "Candidata Luisa González lidera intención de voto, según encuesta Numma" (in Spanish). Radio Pichincha. 21 July 2023. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  20. "Nueva encuesta ubica a Luisa González como favorita para ganar las elecciones". Radio Pichincha. 27 July 2023. பார்க்கப்பட்ட நாள் 28 July 2023.
  21. "ESTUDIO OPINIÓN – ELECCIONES PRESIDENCIALES – cerrado a Agosto 9, 2023" (in Spanish). Cedatos. 11 August 2023. பார்க்கப்பட்ட நாள் 14 August 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  22. "Encuestas" (PDF) (in Spanish). ASCOA. பார்க்கப்பட்ட நாள் 16 August 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  23. 23.0 23.1 23.2 "Daniel Noboa, political neophyte and heir to banana empire, elected president in Ecuador". MSN. பார்க்கப்பட்ட நாள் 16 October 2023.
  24. "Segunda vuelta 2023: Ecuador tendrá a la primera mujer presidenta electa en las urnas o al presidente más joven de la historia". El Universo. 20 August 2023. பார்க்கப்பட்ட நாள் 9 October 2023.
  25. "Daniel Noboa Azín y Gabriela Goldbaum se casan en Salinas | La República EC" (in ஸ்பானிஷ்). 15 January 2018. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  26. 26.0 26.1 "Si no podemos confiar en la justicia, no es justicia" (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). 18 October 2020. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  27. "Juez español investiga a Mapfre por revelar secretos de empresario ecuatoriano" (in ஸ்பானிஷ்). 19 July 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  28. "Mapfre: Juzgado Majadahonda investiga una filtración de datos en divorcio" (in ஸ்பானிஷ்). 20 July 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  29. "Ella es Lavinia, la esposa del candidato presidencial Daniel Noboa Azín" (in ஸ்பானிஷ்). 25 May 2023. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  30. "La 'influencer' Lavinia Valbonesi comparte su felicidad en las redes; se casó con el asambleísta Daniel Noboa" (in ஸ்பானிஷ்). 31 August 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
  31. "¿Quién es Lavinia Valbonesi, la futura primera dama de Ecuador?". பார்க்கப்பட்ட நாள் 16 October 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_நோபோவா&oldid=3811307" இலிருந்து மீள்விக்கப்பட்டது