இளங்கலை வணிக நிர்வாகம்
இளங்கலை வணிக நிர்வாகம் (Bachelor of Business Administration) என்பது வணிக நிர்வாகத்தில் நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இளங்கலைப் பட்டமாகும். இதில் பொதுவாக வணிக நிர்வாகத்தின் அடிப்படைகள் அதாவது, வணிக பகுப்பாய்வு, வணிகத் தொடர்பு, கூடாண்மை ,நிதி, நிதிக் கணக்கியல், பருப்பொருளியல், மேலாண்மை, மேலாண்மைக் கணக்கியல், சந்தைப்படுத்தல், நுண்பொருளியல், வர்த்தக உத்தி, விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகத்தின் கல்வித் துறையுடன் தொடர்புடைய பிற முக்கிய கல்விப் பாடங்கள் போன்ற மேம்பட்ட படிப்புகள் அடங்கும்.
பாடத்திட்ட அமைப்பு
தொகுஒரு குறிப்பிட்ட வணிகம் தொடர்பான கல்வித்துறையில் நிபுணத்துவம் பெற அனுமதிக்கும் அதே வேளையில், ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு அம்சங்கள் மற்றும் அவற்றின் தொடர்பைப் பற்றிய பரந்த அறிவை வழங்கும் வகையில் இதன் கலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. [1] பொதுவாக மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வணிகம் தொடர்பான கல்வித்துறை அல்லது துறைகளில் நிபுணத்துவம் பெற அனுமதிக்கின்றன.
ஒரு மாணவரின் நடைமுறை, மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் வணிக நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அவர்களை தயார்படுத்துதல், வணிக ரீதியிலாக முடிவெடுக்கும் திறன்களை உருவாக்குகிறது. பல திட்டங்கள் பயிற்சி ,நடைமுறைகள் மற்றும் அனுபவத்தை விடய ஆய்வு, விளக்கக்காட்சிகள், உள்ளுறைப் பயிற்சி, தொழில்துறை வருகைகள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் தொடர்புகொள்வது போன்ற வடிவங்களில் உள்ளன. [2]
உலகின் சிறந்த வணிகப் பள்ளிகள்
தொகுபெரும்பாலான வணிகப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குள் வணிகப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு உலக அளவில் வணிக நிர்வாகத்தின் இளங்கலை பட்டப்படிப்புகளின் தரவரிசைப்படி, யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் உலகளவில் சிறந்த பத்து வணிக நிர்வாக திட்டங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளது: [3]
- ஆர்வர்டு பல்கலைக்கழகம் ( கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ், யு.எஸ் )
- மாசாச்சூசெட்சு தொழில்நுட்ப நிறுவனம் ( கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ், அமெரிக்கா )
- இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் ( இசுட்டான்போர்டு, கலிபோர்னியா, யு.எஸ் )
- கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி ( பெர்க்லி, கலிபோர்னியா, யு.எஸ் )
- சிக்காகோ பல்கலைக்கழகம் ( சிகாகோ, இல்லினாய்சு, அமெரிக்கா)
- பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ( பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா)
- இலண்டன் பொருளியல் பள்ளி ( இலண்டன்)
- கொலம்பியா பல்கலைக்கழகம் ( நியூயார்க் நகரம், அமெரிக்கா )
- நியூயார்க் பல்கலைக்கழகம் ( நியூயார்க் நகரம்)
- ஈராஸ்மசு பல்கலைக்கழகம் ரோட்டர்டாம் ( ராட்டர்டேம், நெதர்லாந்து
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ Plant, Arnold (1932). "Trends in Business Administration". Economica (35): 45–62. doi:10.2307/2548975. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0427. https://www.jstor.org/stable/2548975.
- ↑ Miranda, Rodrigo; Gramani, Maria Cristina; Andrade, Eduardo (2012). "Technical efficiency of business administration courses: a simultaneous analysis using DEA and SFA" (in en). International Transactions in Operational Research 19 (6): 847–862. doi:10.1111/j.1475-3995.2012.00857.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1475-3995. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/j.1475-3995.2012.00857.x.
- ↑ "Best global universities for economics and business, U.S. News & World Report, 2023