ரகுராம்

தமிழ்த் திரைப்பட நடிகர்
(ரகுராம் (நடன இயக்குநர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரகுராம் (raghuram, மார்ச் 23, 1949 - நவம்பர் 30, 2013) பிரபல திரைப்பட நடன இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார்.[1]

ரகுராம்
பிறப்பு23 மார்ச் 1949
இறப்பு30 நவம்பர் 2013(2013-11-30) (அகவை 64)
பணிநடன இயக்குநர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1949 - 2001
வாழ்க்கைத்
துணை
கிரிஜா
பிள்ளைகள்சுஜா ரகுராம்
காயத்திரி ரகுராம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் பாரம்பரிய கலைக் குடும்பத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்திர். இவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் பேரன். தனது 6 வயதில் நடனம் கற்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் கதகளியும், பின்னர் தனது சித்தி பத்மா சுப்பிரமணியத்துடன் இணைந்து கே. ஜே. சரசா என்பவரிடம் பரத நாட்டியம் பயின்றார்.[2] மேடை நாடகங்களிலும், பத்மா சுப்பிரமணியத்தின் நடனக் குழு, நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளின் நடனக் குழு, வைஜெயந்திமாலாவின் நடனக்குழு ஆகியவற்றிலும் நடனமாடி வந்தார்.[2] நடன இயக்குநர் தங்கப்பனிடம் உதவியாளராகப் பணியாற்றிய போது, அங்கு மற்றொரு உதவியாளராக இருந்த கிரிஜா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிரிஜா பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டரின் சகோதரி ஆவார்.[1] இவர்களுக்கு சுஜா (நடிகை), காயத்திரி ரகுராம் (நடன இயக்குநர், நடிகை) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

திரைப்படங்களில்

தொகு

1960 ஆம் ஆண்டில் படிக்காத மேதை திரைப்படத்தில் படத்தின் மூலம் குழந்தை நடிகராக இவர் அறிமுகமானார். தொடர்ந்து அருணகிரிநாதர் திரைப்படத்தில் பாலமுருகன் வேடத்தில் நடித்தார்.[2]

நடன இயக்குநராக

தொகு

பல திரைப்படங்களில் நடித்துவந்த ரகுராம் நடன இயக்குநர் சோப்ராவிடம் உதவியாளராக பணியாற்றினார். 1974 ஆம் ஆண்டு "கன்ன வயசு" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடன இயக்குநராக முதன் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து "மதுரகீதம்', "வாழ்வு என் பக்கம்' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்தார்.[2]

வி. சி. குகநாதனுடன் இணைந்து மணிப்பூர் மாமியார், கண்ணா நீ வாழ்க உட்படப் பல திரைப்படங்களைத் தயாரித்தார். ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த பாக்ய தேவ்தா என்ற வங்காள மொழித் திரைப்படம், விஸ்வநாதன் வேலை வேண்டும் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இயக்குநர் கே. பாலசந்தரின் பல திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். நடிகை ஜெயலலிதாவுடன் "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற நாடகத்தில் இவர் நடித்துள்ளார்.[2]

விருதுகள்

தொகு
  • தமிழக அரசின் கலைமாமணி விருது,
  • நடனக் கலைக்காக அமெரிக்காவில் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம்

திரைப்பட வரலாறு

தொகு

நடிகர்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
1996 அவ்வை சண்முகி சிறப்புத் தோற்றம்
2008 தசாவதாரம் அப்பா ராவ்

இயக்குநர்

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1985 விஸ்வநாதன் வேலை வேணும் தமிழ் [3]
1995 பாக்ய தேபாடா வங்காளம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 பிரபல நடன இயக்குநர் ரகுராம் காலமானார்! பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம், தினமலர், நவம்பர் 30, 2013
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 நடன இயக்குநர் ரகுராம் காலமானார், தினமணி, நவம்பர் 30, 2013
  3. "Choreographer Raghuram Passes Away". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகுராம்&oldid=4158420" இலிருந்து மீள்விக்கப்பட்டது