மேரி ஹாரிசு ஜோன்சு

அமெரிக்காவில் தொழிற்சங்க மற்றும் சமூக அமைப்பாளராகப் புகழ் பெற்றவர்

மேரி ஹாரிசு "மதர்" ஜோன்சு (Mary Harris "Mother" Jones) (ஆகத்து 1, 1837 – நவம்பர் 30, 1930), அயர்லாந்தின் கார்க் நகரில் பிறந்தவர். அமெரிக்காவில் தொழிற்சங்க மற்றும் சமூக அமைப்பாளராகப் புகழ் பெற்றவர். பல தொழிற்சங்க வேலைநிறுத்தங்களை ஒருங்கிணைத்து உதவியுள்ள இவர் உலக தொழிலக தொழிலாளர்கள் (Industrial Workers of the World) என்ற அமைப்பின் இணைநிறுவனர்.

மதர் ஜோன்சு
பிறப்பு(1837-08-01)ஆகத்து 1, 1837
கார்க், கார்க் கௌன்ட்டி, அயர்லாந்து
இறப்புநவம்பர் 30, 1930(1930-11-30) (அகவை 93)
சில்வர் இசுபிரிங் , மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா
பணிதொழிற்சங்கம் மற்றும் சமூக அமைப்பாளர்

துவக்கத்தில் ஓர் ஆசிரியையாகவும் உடைத்தயாரிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இவரது நான்கு குழந்தைகளும் கணவரும் மஞ்சள் நோயால் இறந்து 1871ஆம் ஆண்டு இவரது பணிமனையும் தீயில் அழிபட்டபின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டார். சிறந்த பேச்சாற்றல் கொண்ட ஜோன்சு இடையிடையே கதைகள் கூறியும் கேட்போரையும் பங்குபெறச் செய்தும் நகைச்சுவை,நாடகத்தன்மை இவற்றினாலும் மிகவும் வினைவுறு பேச்சாளராக இருந்தார்.1897ஆம் ஆண்டு முதல் "மதர்" என்று அழைக்கப்படலானார். 1902ஆம் ஆண்டு சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை வெற்றிகரமாக நடத்தியதை அடுத்து "அமெரிக்காவின் மிக அபாயகரமான பெண்மணி" எனக் குறிப்பிடப்பட்டார். 1903ஆம் ஆண்டு பென்சில்வேனியா சுரங்கங்களிலும் பட்டாலைகளிலும் சிறுவயது தொழிலாளர் சட்டங்களை அமலாக்குவதில் இருந்த சுணக்கத்தை எதிர்த்து பிலடெல்பியாவிலிருந்து குடியரசுத் தலைவர் தியோடோர் ரூஸ்வெல்ட் இல்லம் வரை சிறுவர்கள் பேரணி ஒன்றை நடத்திச் சென்றார்.

1970ஆம் ஆண்டு அவர் நினைவாக மதர் ஜோன்சு என்ற இதழ் வெளிவரத் துவங்கியது.

1989-90 பிட்சன் நிலக்கரி வேலைநிறுத்தத்தின்போது, தொழிலாளர்களின் மனைவிகளும் மகள்களும் அவர்கள் சார்பில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது தங்களை மதர் ஜோன்சின் மகள்கள் என்றே அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

நூல்கள்

தொகு

குறிப்புகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_ஹாரிசு_ஜோன்சு&oldid=3792512" இலிருந்து மீள்விக்கப்பட்டது