யோகான் தோபியாசு மேயர்
யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) (5 மே 1752 – 30 நவம்பர் 1830) ஒரு செருமானிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் கணிதவியல், இயற்கை அறிவியல் பாடநூல்களுக்குப் பெயர்போனவர். இவர் 1801 இல் எழுதிய இயற்பியல் பாடநூலான Anfangsgründe der Naturlehre zum Behuf der Vorlesungen über die Experimental-Physik எனும் நூல் செருமன் மொழிபேசும் நாடுகளில் எல்லாம் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. இவரது வானியல், செய்முறை இயற்பியல் ஆய்வுகள் Annalen der Physik எனும் இதழில் வெளியாகின. இவரது தந்தையாரான தோபியாசு மேயருடன் இவரைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
யோகான் தோபியாசு மேயர் Johann Tobias Mayer | |
---|---|
பிறப்பு | கோட்டிங்கன் | 5 மே 1752
இறப்பு | 30 நவம்பர் 1830 கோட்டிங்கன் | (அகவை 78)
ஆய்வு நெறியாளர் | ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்னர் ஜார்ஜ் கிறிசுடோப் இலிச்டென்பர்கு |
முனைவர் பட்ட மாணவர்கள் | யோகான் சுவீகர் என்னோ டிர்க்சன் |
வாழ்வும் பணியும்
தொகுமேயர், தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் கோட்டிங்கனில் புவிப்பரப்பியல், இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராக விளங்கினார். மேயரின் பத்தாம் அகவையிலேயே தந்தையார் இறந்து விட்டுள்ளார். இவர் 1769 இல் கோட்டிங்கன், ஜார்ஜ் ஆகத்து பல்கலைக்கழகத்தில் இறையியலும் மெய்யியலும் கற்றார். இது அப்போது தான் ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்னரின் கீழ் தொடங்கப்பட்ட புதிய பல்கலைக்கழகமாகும். காசுட்னருக்குப் பின்னர், இது ஜார்ஜ் கிறித்தோப் இல்ச்டென்பர்கின் கீழ் இயங்கியது. இவர் 1773 இல் பட்டம் பெற்றதும் கணிதவியல் விரிவுரையாளராகவும் வானியலாளராகவும் பணிபுரிந்தார். இவர் 1779 நவம்பர் 17 இல் அல்தோர்ஃப் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டுள்ளார். அங்கே இவர் 1780 முதல் 1786 வரை பணிபுரிந்தார். பிறகு இவர் எர்லாங்கன் நியூரன்பர்கில் அமைந்த பிரீட்ரிக் அலெக்சாந்தர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலும் இயற்பியலும் கற்பித்தார். இவர் 1799 இல் கோட்டிங்கனில் இலிச்டென்பருக்குப் பிறகு தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்துக்குத் தலைமை வகித்துள்ளார். இவரது மாணவர்களில் என்னோ கீரன் டிர்க்சன் அடங்குவார். டிர்க்சன் 1820 இல் முனைவர் பட்டம் பெற்றதும், கார்ல் குசுதவ் யாகோபு யாகோபுக்கு அறிவுரையாளராக விளங்கினார். மேயருக்கும் அவரது மனைவி யோகான்னாவுக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். மேயர் கோட்டிங்கனில் இறந்தார்.
பிதாகோரசின் தேற்ற நிறுவல்
தொகுஇலியனார்டோ டா வின்சியினது எனக் கருதப்பட்ட பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு இப்போது மேயர் 1772 இல் நிறுவியதாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- arXiv Article 1311.0816, Franz Lemmermeyer, "On Leonardo da Vinci's proof of the Theorem of Pythagoras," ArXiv, November 4, 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Entry in the Mathematics Genealogy Project
- Astronomie in Nürnberg (in German) பரணிடப்பட்டது 2012-02-06 at the வந்தவழி இயந்திரம்