துருக்கிய லிரா
துருக்கிய லிரா (துருக்கிய மொழி: Türk lirası; சின்னம்: TL; குறியீடு: TRY) துருக்கி நாட்டின் நாணயம். வட சைப்பிரசு நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. லிரா 1844ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 வரை புழக்கத்திலிருந்த இந்த நாணயம் “முதல் லிரா” என்றழைக்கப்பட்டது. 2005ல் துருக்கி அரசு புதிய துருக்கிய லிரா என்ற புது நாணய முறையை உருவாக்கியது. இது “இரண்டாம் லிரா” என்றும் அழைக்கப்படுகிறது. முதல் லிரா மதிப்பு மிகக்குறைவாக இருந்தது இம்மாற்றத்துக்கு காரணம். ஒரு புது லிராவின் மதிப்பு பத்து லட்சம் முதல் லிராக்கள். 2008 துவக்கத்திலிருந்து முதல் லிரா புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பபட்டது. ஒரு லிராவில் 100 குருஸ்கள் உள்ளன.
துருக்கிய லிரா | |
---|---|
Türk lirası (துருக்கி மொழி) | |
![]() 1 துருக்கிய லிரா | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | TRY |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | குருஸ் |
குறியீடு | TL |
வங்கிப் பணமுறிகள் | |
அதிகமான பயன்பாடு | 5TL, 10TL, 20TL, 50TL |
Rarely used | 100TL, 200TL |
Coins | |
Freq. used | 10, 25, 50 Kr , 1TL |
Rarely used | 1 Kr 5 Kr |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() , வட சைப்பிரசு |
Issuance | |
நடுவண் வங்கி | துருக்கி குடியரசின் மத்திய வங்கி |
Website | www.tcmb.gov.tr |
Printer | சிபிஆர்ட் வங்கித்தாள் அச்சகம் |
Website | www.tcmb.gov.tr |
Valuation | |
Inflation | 5.24% (மே 2009) |
Source | NTVMSNBC |