இத்தாலிய ஐக்கியம்

பல்வேறு மாநிலங்களாகப் பிரிவுற்றிருந்த இத்தாலியை தனி நாடாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கிய அரசியல் சமூகச் செயற்பாடே இத்தாலிய ஐக்கியம் எனப்படுகின்றது. இது தொடர்பான சரியான திகதி தொடர்பான சான்றுகள் கிடைக்காவிட்டாலும், பல வரலாற்றியலாளர்கள் இது 1815 தொடக்கம் 1870 வரை இடம்பெற்றெதெனக் கூறுவர். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் இத்தாலி என ஒரு நாடு இருக்கவில்லை; அது ஒரு தீபகற்பம் அதாவது ஒரு புவியியற் பிரதேசம்.

இத்தாலிய ஐக்கியம்
Risorgimento
மிலானின் ஐந்து நாட்கள், 18–22 மார்ச் 1848.
தேதி1815–1871
நிகழ்விடம்இத்தாலி
பங்கேற்றவர்கள்இத்தாலிய சமூகம், சார்டினியா இராச்சியம், மிலானின் இடைக்கால அரசு,

சான் மார்கோ குடியரசு, சிசிலியா இராச்சியம், உரோமானியக் குடியரசு, கார்பொனாரி, பிரெஞ்சுக் குடியரசு, பிரெஞ்சுப் பேரரசு,

சிவப்பு சட்டையினர், ஹங்கேரியப் படையணி, தெற்கு இராணுவம், மத்திய இத்தாலியின் ஐக்கிய மாகாணங்கள், இத்தாலிய இராச்சியம்
விளைவு
 • 1820 ஆம் ஆண்டு இத்தாலிய புரட்சிகள்
 • 1830 ஆம் ஆண்டு இத்தாலிய புரட்சிகள்
 • இத்தாலிய மாநிலங்களில் 1848 இல் நடந்த புரட்சிகள்
 • இத்தாலியின் முதலாவது சுதந்திரப் போர்
 • இத்தாலியின் இரண்டாவது சுதந்திரப் போர்
 • ஆயிரத்தின் பயணம்
 • ரோம் கைப்பற்றத்தின் பிரகடனம்
 • இத்தாலியின் மூன்றாவது சுதந்திரப் போர்
 • உரோம் கைப்பற்றப்படல்
 • உரோம் நகரம் இத்தாலிய இராச்சியத்தின் தலைநகராதல்
1815-70 காலப்பகுதியில் இத்தாலி.
இத்தாலிய ஐக்கியம் 1829–71

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் இத்தாலி ஒன்றுபடுவதைத் தடுத்த காரணிகள்

 • இத்தாலியில் வெளிநாட்டு ஆதிக்கம்.
 • பாப்பரசரின் அதிகாரங்கள்
 • பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இத்தாலிய மக்களிடம் தேசப்பற்று காணப்படவில்லை.

பிளவுபட்டிருந்த இத்தாலிய மக்களிடையே தேசிய உணர்வை ஏற்படுத்தி அதை ஒன்றிணைக்க முடியும் என்று வழிகாட்டியவர் நெப்போலியன் பொனபாட் ஆவார். ஜோசப் மசினி அதனைச் செயலில் முன்னெடுத்துச் சென்றதுடன், அதனைத் திட்டமிட்டவர் கவுன்ட் கவூர் ஆவார். குஸிப் கரிபால்டி இதற்குப் படையைத் திரட்டினார். இதன் மூலம் 1870இல் இத்தாலி தனிநாடக உருவாக்கப்பட்டது.

இத்தாலியில் வெளிநாட்டு ஆதிக்கம்

தொகு

மத்திய காலத்தில் இத்தாலி பல சிற்றரசுகளாகச் சிதறிக் கிடந்தது. அந்த அரசுகளிடையில் அதிகாரப் போட்டி நிலவியது. அவ்வாறே ஐரோப்பாவில் இருந்த பலம் வாய்ந்த அரசுகள் இத்தாலியின் பிரதேசங்களைத் தமது ஆட்சியின் கீழ் வைத்திருந்தன. உதாரணமாக சிசிலி, நேப்பிள்ஸ் என்பன ஸ்பானியாவின் கீழும் பிர்மா, மொடினா, டஸ்கனி, வெனிஸ் முதலான நகரங்கள் ஆஸ்திரியாவின் கீழும் இருந்தன. மத்திய இத்தாலி பாப்பரசரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. வெளிநாட்டவரின் ஆதிக்கமும் பாப்பரசரின் அரசும் இத்தாலியை இணைப்பதற்குத் தடையாக இருந்தன.

நெப்போலியனின் கீழ் இத்தாலி

தொகு
 
நெப்போலியன் பொனப்பார்ட்டே 23 வயதில் கோர்சிக்கக் குடியரசுத் தன்னார்வப் படைப்பிரிவின் லெப்டினன்ட் கர்னலாகப் பணிபுரிந்தபோது.

நெப்போலியன் கி.பி. 1797 ஆம் ஆண்டு வட இத்தாலியின் லொம்பாடி, ஜினோவா, நேப்பிள்ஸ் ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றினார். கி.பி. 1807 ஆம் ஆண்டு பாப்பரசரின் கீழ் இருந்த இத்தாலியப் பிரதேசத்தை வென்று "வட இத்தாலி" என்ற அரசை ஆரம்பித்தார். இவர் நெப்போலிய சட்டங்களைக் கொண்டு வந்து இத்தாலியை வளர்த்தார்.

வியன்னா மாநாட்டின் பின்னர் இத்தாலி

தொகு

நெப்போலியன் யுத்தத்தில் தோல்வியடைந்ததுடன் 1815இல் வியன்னா மாநாட்டின் மூலம் இத்தாலியப் பிரதேசம் மீண்டும் கி.பி. 1798 இற்கு முன்னர் ஆட்சி செய்தவர்களுக்கே வழங்கப்பட்டது. அதன்படி உரோமை மையமாகக் கொண்ட மத்திய இத்தாலி பாப்பரசருக்கும் ஏனைய பிரதேசங்கள் அந்தந்த அரச வம்சத்தினருக்கும் கிடைத்தன. இதன் பின்னர் கி.பி. 1815 ஆம் ஆண்டின் பின் ஆஸ்திரியா, எசுப்பானியா ஆகிய நாடுகள் இத்தாலியின் மூலம் பயனடைந்தன. பாப்பரசரும், சார்தீனிய மன்னரும் ஆட்சியாளர்களாக இருந்தனர். நெப்போலியனின் விதவை மனைவியாகிய மேரி லூயியின் கீழிருந்த தஸ்கனிப் பிரதேசத்தில் சிறந்த ஆட்சி நிலவியது. ஆஸ்திரியாவின் வருமானத்தில் 25% இத்தாலியப்பிரதேசத்திலிருந்தே பெறப்பட்டது. கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சார்தீனியாவின் மன்னன் விக்டர் இம்மானுவேலும் மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்கிய ஆட்சியாளன் ஆவான்.

காபொனாரி இயக்கம்

தொகு
 
மசினி.

வியன்னா மாநாட்டிற்குப் பிற்பட்ட கொடுங்கோல் ஆட்சிகளால் இத்தாலிய மக்களிடம் தேசிய உணர்வு எழுச்சியுற்றது. காபொனாரி என்ற இரகசிய இயக்கம் ஜோசப் மசினியால் மக்களுடன் உருவாக்கப்பட்டது. 1825 இல் ஆஸ்திரிய அரசு இவ்வியக்கத்தை அடக்கி மசினியை பிரான்சுக்கு நாடுகடத்துவதில் வெற்றி கண்டது.

இளம் இத்தாலி இயக்கம்

தொகு

1830 இல் மீண்டும் இத்தாலியை இணைப்பதற்கு குரல் எழுப்பப்பட்ட போதிலும் அது தோற்கடிக்கப்பட்டது. 1831 இல் பீட்மன்டில் ஆட்சியதிகாரம் பெற்ற மன்னன் அல்பேர்ட் சார்ல்ஸ் அதற்குத் துணையாக இருப்பானென நம்பப்பட்ட போதிலும் அவ்வாறு நடைபெறாததால் மீண்டும் மசினியின் தலமையில் இளம் இத்தாலிய இயக்கம் உருவானது. "ஒற்றுமையும் சுதந்திரமும்" அவர்களது தாரக மந்திரமாகும்.

கவுன்ட் கவூரின் பங்களிப்பு

தொகு
 
கமிலோ பென்ஸோ, கவுன்ட் கவூர்.

கவுன்ட் கவூர் 1852 ஆம் ஆண்டு இத்தாலிய பீட்மன்ட் அரசின் பிரதமராகக் கானப்பட்டவராவார். மறு பிறப்பு எனும் நூலை எழுதி அதன் மூலம் இத்தாலிய ஐக்கியத்திற்கு ஊட்டமளித்தார். இவரது அரசாங்கம்ம் மூலம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதுடன் பொது வசதி மற்றும் உற்பத்தி அதிகரித்தது. பிரான்சிய மன்னன் மூன்றாம் நெப்போலியனுடன் புளொம்பியஸ் உடன்படிக்கை செய்து கவுன்ட் கவூர் ஆஸ்திரியாக்கு எதிராக போர் தொடுத்தாலும், மூன்றாம் நெப்போலியன் படையுதவியை நிறுத்தியதால் அம்முயற்சி தோல்வியடைந்தது.

கரிபால்டியின் செயற்பாடு

தொகு

குஸிப் கரிபால்டி வெளிநாட்டு கெரில்லாப் போர்களை மேற்கொண்ட தலைவனாவான். 1860 ஆம் ஆண்டு இவர் தலமையில் சென்ற 1000 போர்வீரர் படை மெசினா நகரைத் தவிர ஏனைய பிரதேசங்களைக் கைப்பற்றியது. அதன் பின் நேப்பிள்ஸ் மற்றும் மெசினா நகர்கள் இணைக்கப்பட்டன.

இத்தாலி இணைக்கப்படல்

தொகு

கரிபால்டி தான் கைப்பற்றிய பிரதேசங்களை மன்னன் இரண்டாம் விக்டர் இம்மானுவலுக்கு வழங்கினார். பிஸ்மார்க்குடன் உடன்படிக்கை செய்து ஜெர்மன்-ஆஸ்திரியப் போரில் ஜேர்மனிக்கு உதவியதன் மூலம் இத்தாலியுடன் வெனிஸ் இணைக்கப்பட்டது. 1870 இல் ஜேர்மன்-பிரான்ஸ் போர் காரணமாக ரோமில் பாப்பரசருக்கு ஆதரவாக பிரான்ஸ் வைத்திருந்த படையணி மீளப்பெறப்பட்டதன் காரணமாக உரோம் போரின்றி இத்தாலியுடன் இணைக்கப்பட்டது. இவ்வாறாக இத்தாலி என்றொரு புதிய தேசம் உருவாக்கப்பட்டது.

இத்தாலிய ஐக்கியத்தின் வரைபடங்கள்

தொகு

நூற்பட்டியல்

தொகு
 • Beales, Derek; Biagini, Eugenio (2003). The Risorgimento and the Unification of Italy (2nd ed.). Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-582-36958-0.
 • Davis, John A., ed. (2000). Italy in the nineteenth century: 1796–1900. Short Oxford History of Italy. London: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-873128-3. பார்க்கப்பட்ட நாள் 2012-03-19.
 • Arcaini, G.B. (6 March 2005). "The Italian Unification". History of Italy. Archived from the original on 2017-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-03-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 • Arcaini, G.B. (30 November 2003). "Italy's Unity". History of Italy. Archived from the original on 2012-03-28. பார்க்கப்பட்ட நாள் 2012-03-19.
 • De Cesare, Raffaele. The Last Days of Papal Rome, Archibald Constable & Co, London (1909)
 • De Mattei, Roberto. Pius IX (2004)
 • Hales, E.E.Y. Pio Nono: A Study in European Politics and Religion in the Nineteenth Century. P.J. Kenedy, 1954.
 • Hales, E.E.Y. The Catholic Church in the Modern World. Doubleday, 1958
 • Holt, Edgar. The Making of Italy 1815–1870, New York: Atheneum, 1971
 • Smith, Denis Mack. Cavour (1985)
 • Smith, Denis Mack. Mazzini (1996) excerpt and text search
 • Trevelyan, George Macaulay. Garibaldi and the making of Italy (1911) full text online
 • Mauri, Arnaldo. The Adriatic Eastern Shores, a Missed Target in the Italian Unification Process: Political and Economic Involvements, Università degli Studi di Milano, DEAS, WP N°. 2011 – 09, Abstract available in English at SSRN 1832287.[1] [2]

இத்தாலியன்

தொகு
 • Banti, Alberto Mario. La nazione del Risorgimento: parentela, santità e onore alle origini dell'Italia unita. Torino, Einaudi, 2000
 • Banti, Alberto Mario. Il Risorgimento italiano. Roma-Bari, Laterza, 2004 (Quadrante Laterza; 125)
 • Ghisalberti, Carlo. Istituzioni e società civile nell'età del Risorgimento. Roma-Bari, Laterza, 2005 (Biblioteca universale Laterza; 575)
 • Della Peruta, Franco. L'Italia del Risorgimento: problemi, momenti e figure. Milano, Angeli, 1997 (Saggi di storia; 14)
 • Della Peruta, Franco. Conservatori, liberali e democratici nel Risorgimento. Milano, Angeli, 1989 (Storia; 131)
 • De Rosa, Luigi. La provincia subordinata. Saggio sulla questione meridionale, Bari, Laterza, 2004
 • Guerra, Nicola. Le due anime del processo di unificazione nazionale: Risorgimento e Controrisorgimento. La necessità di un nuovo approccio di ricerca ancora disatteso. Pesaro, Chronica Mundi, October 2011, ISNN: 2239-7515
 • Riall, Lucy. Il Risorgimento: storia e interpretazioni. Roma, Donzelli, 1997 (Universale; 2)
 • Romeo, Rosario. Risorgimento e capitalismo. Roma-Bari, Laterza, 1998 (Economica Laterza; 144) (1ª ed. 1959)
 • Scirocco, Alfonso. L'Italia del risorgimento: 1800–1860. (vol. 1 di Storia d'Italia dall'unità alla Repubblica), Bologna, Il mulino, 1990
 • Scirocco, Alfonso. In difesa del Risorgimento. Bologna, Il mulino, 1998 (Collana di storia contemporanea)
 • Smith, Denis Mack. Il Risorgimento italiano: storia e testi. (Nuova ediz.), Roma-Bari, Laterza, 1999 (Storia e società)
 • Woolf, Stuart J. Il risorgimento italiano. Torino, Einaudi, 1981 (Piccola biblioteca Einaudi; 420)
 • Tomaz, Luigi. Il confine d'Italia in Istria e Dalmazia, Presentazione di Arnaldo Mauri, Conselve, Think ADV, 2008.
 • Carlo Cardia, Risorgimento e religione, Giappichelli, Torino, 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-348-2552-5.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Italian Risorgimento
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலிய_ஐக்கியம்&oldid=3605488" இலிருந்து மீள்விக்கப்பட்டது