உற்பத்தி

(தயாரிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உற்பத்தி என்பது இயந்திரம், கருவிகள் போன்றவற்றின் செயலாக்கத்தாலும், தொழிலாளிகளின் உழைப்பாலும் சரக்குகள் அல்லது பொருட்களை தயாரிப்பதாகும். உற்பத்தி என்ற சொல் மனிதச் செயல்பாடுகள், கைவினைப்பொருள் அல்லது உயர் நுட்பத் உற்பத்தி போன்றவைகளை குறிப்பதாயினும், பொதுவாக மூலப் பொருள்களில் இருந்து பெருமளவில் ஆக்கம்பெற்ற சரக்குகளை உற்பத்தி செய்யும் தொழிற்துறை தயாரிப்பை குறிப்பதாகும். இதுபோன்ற ஆக்கம்பெற்ற சரக்குகள், பின் வேறு சில சிக்கலான தயாரிப்புகளை உற்பத்தி செய்யவோ, அல்லது மொத்த வியாபாரிகளுக்கு விற்கவோ பயன்படுகின்றன.

உற்பத்திபொருளின் வாழ்க்கை வட்டம்
உற்பத்திபொருளின் வாழ்க்கை வட்டம்

உற்பத்தியானது பொருளாதார அமைப்புகளில் அனைத்து வகையான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தில், வழக்காக உற்பத்தி என்பது நுகர்வோருக்கு விற்பதால் இலாபமுண்டாகிற தயாரிப்புகளின் மொத்த தயாரிப்புகளையே குறிப்பிடுகிறது. கூட்டுடைமையளர் பொருளாதாரத்தில், உற்பத்தி என்பது மத்தியில் திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு வழங்கும் நிலையைக் குறிப்பிடும். கலப்புச் சந்தைப் பொருளாதாரத்தில், உற்பத்தி என்பது அரசின் சில கட்டுப்பாடுகளுக்கு இடையில் நடைபெறுகிறது.

உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் தொகு

உற்பத்தியில் முதல் 20 நாடுகளின் பட்டியல்கள், உலக வங்கியின் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் மொத்த அமெரிக்க டாலர்களில்[1]

தரவரிசை நாடு பத்து லட்சம் $US Year
 உலக உற்பத்தி 13,171,000 2017
1   சீனா 4,002,752 2018
2   ஐக்கிய அமெரிக்கா 2,173,319 2017
3   சப்பான் 1,007,330 2017
4   செருமனி 832,431 2018
5   தென் கொரியா 440,941 2018
6   இந்தியா 408,693 2018
7   இத்தாலி 310,897 2018
8   பிரான்சு 273,971 2018
9   ஐக்கிய இராச்சியம் 251,985 2018
10   மெக்சிக்கோ 208,498 2018
11   இந்தோனேசியா 207,017 2018
12   உருசியா 203,988 2018
13   பிரேசில் 180,541 2018
14   எசுப்பானியா 180,264 2018
15   கனடா 160,531 2015
16   துருக்கி 146,077 2018
17   தாய்லாந்து 135,927 2018
18   சுவிட்சர்லாந்து 129,162 2018
19   அயர்லாந்து 115,591 2018
20   சவூதி அரேபியா 100,232 2018

மேற்கோள்கள் தொகு

  • Kalpakjian, Serope; Steven Schmid (August 2005). Manufacturing, Engineering & Technology. Prentice Hall. pp. 22–36, 951–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-148965-8.
  1. "Manufacturing, value added (current US$) | Data". data.worldbank.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்பத்தி&oldid=3032484" இலிருந்து மீள்விக்கப்பட்டது