பியூரர் பதுங்கு அறை

(ஃபியூரர் பதுங்கு அறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பியூரர் பதுங்கு அறை(பியூரர் பங்கர்) என்று ஜெர்மானிய வேந்தரான ஃபியூரர் வசிக்கும் இல்லத்தை அல்லது மாளிகையை குறிப்பிடுவர்.[1]

பியூரர் பங்கர் பின்பக்க நுழைவாயில் தோற்றம் 1947 ல்(இடிக்கப்படுவதற்கு முன்)
பியூரர் பங்கர் 1947 ல் இடிக்கப்பட்டபோது
அடுக்குமாடி குடியிருப்புகளாக உருமாறிய பியூரர் பங்கர் 2007 ல்

இரண்டு பதுங்கு அறைகள்

இது இரண்டு பிரிவுகளாக, இரண்டு மாளிகைகளாக கட்டப்பட்டது. ஒன்று வோர் பங்கர் பழைய பதுங்கு அறை இன்னொன்று பியூரர் பங்கர் புதியது. இது ஜெர்மன் நாடாளுமன்ற கட்டிடதிதிலிருந்து (ரீச் சான்சிலர்) 8.2 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. பியூரர் பங்கர் வோர்பங்கரின் கீழ் பகுதியில் அமைந்திருந்த்து.

கட்டுமானம்

இரண்டு பங்கர்களையும் இணைக்க படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டது. அதன் சுவர்கள் 4 மீட்டர் தடிமானம் கொண்டவையாக இருந்தன. 30 அறைகள் கொண்டதாக 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டிருந்தன. அதனிலிருந்து வெளியேற அவசர வழியொன்று அமைக்கப்பட்டு தோட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த்து. இதன் கட்டுமானம் 1936 ல் ஒரு பகுதியாகவும் இரண்டாவது கட்டுமானம் 1943 லும் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டுமான பொறுப்பை ஹோச்சஸ்ட் என்ற நிறுவனம் ஏற்றிருந்தது.

இட்லரின் திருமணம்

1945 ஜனவரி முதல் இந்த மாளிகையில் குடியேறி அவர் இறக்கும் காலம் வரை இதில் வசித்தார். அவருடன் இவா பிரான் , அவர் அதிகாரிகள் அனைவரும் குடியேறினர் . இட்லருக்கும் இவா பிரானுக்குமிடையே நடந்த திருமணம் இங்குதான்.

தாக்குதலுக்குள்ளான பொழுது

இம்மாளிகைக்காக பணிபுரிய 36 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ,மருத்துவர்கள், சமையலாளர்கள் பணிஅமர்த்தப்பட்டனர். ஏராளமான கேளிக்கை விருந்துகளும் அரசியல் ஆலோசனைகளும் இங்குதான் நடைபெற்றன. 1945 ல் பெர்லினில் செஞ்சேனை தாக்குதலின் போது இம்மாளிகை தாக்கதலுக்குள்ளானபோது இதன் வலிமையான கட்டுமானம் இட்லரை காப்பாற்றியது.

இங்குதான் இட்லரும் அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை புரிந்து இறந்தனர். இவ்விடத்தில் உள்ள தோட்டத்தில் இவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது இம்மாளிகை ருஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினின் செஞ்சேனைகளால் கைபற்றப்பட்டது.

இடிக்கப்படுதல்

1947 ல் நேச நாட்டு அணியினரால் இம்மாளிகை இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இன்று அம்மாளிகை இருந்த தடயமே தெரியாத அளவுக்கு பல அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், உணவு விடுதிகளாகவும் உருமாறியுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Musmanno, Michael A. (1950). Ten Days to Die (in ஆங்கிலம்). Garden City, NY: Doubleday. pp. 233–34.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூரர்_பதுங்கு_அறை&oldid=4100811" இலிருந்து மீள்விக்கப்பட்டது