பிராங்க்ஃபுர்ட்

(ஃபிராங்க்ஃபுர்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன் (Frankfurt am Main) ஜெர்மனியின் ஐந்தாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் உள்ளிட ஃபிராங்க்ஃபுர்ட் மாநகரம் ஜெர்மனியின் இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். ஐரோப்பா கண்டத்தில் இந்நகரும் பாரிசும் மிக முக்கியமான வர்த்தக நகரங்கள் ஆகும். ஜெர்மனியின் முக்கியமான வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரம் ஆகும். இங்கு 664.000 மக்கள் வசிக்கிறார்கள். ரோமர் காலத்தில் இங்கு ஜெர்மனிய அரசர்கள் முடிசூட்டப்படும் இடமாகவும் இருந்தது. 1806 ஆம் ஆண்டு வரை இது சுகந்திர ராஜ்யமாக இருந்து வந்தது.[1][2][3]

ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன்
Frankfurt am Main
ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன்
ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன்
அலுவல் சின்னம் ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன் Frankfurt am Main
சின்னம்
ஜெர்மனியில் அமைவிடம்
ஜெர்மனியில் அமைவிடம்
நாடு செருமனி
மாநிலம்ஹெசி
ஆட்சிப் பகுதிடார்ம்ஸ்டாட்
தோற்றம்1ஆம் நூற்றாண்டு
அரசு
 • மாநகரத் தலைவர்பெட்ரா ராத் (CDU)
பரப்பளவு
 • மொத்தம்248.31 km2 (95.9 sq mi)
ஏற்றம்
112 m (367 ft)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்6,67,598
 • அடர்த்தி2,689/km2 (6,963/sq mi)
 • பெருநகர் அடர்த்தி58,00,000/km2 (1,50,00,000/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
60001-60599, 65901-65936
இடக் குறியீடு(கள்)069, 06109, 06101தொலைபேசிக் குறியீடு
வாகன அடையாளம்F
இணையதளம்www.frankfurt.de

இன்று ஜரோப்பாவின் முக்கிய வியாபார, சந்தைப்படுதல் மற்றும் சேவை நகரமாக அமைந்துள்ளது. ஆகவே சர்வதேச அளவில் முக்கிய நகரங்களில் ஒன்று இது. ஐரோப்பிய மத்திய வங்கி, ஜெர்மனிய கூட்டுவங்கி, ரங்பூர் பங்குசந்தை மற்றும் சந்தைப்படுத்தல் மையம் இருப்பதால் பிரபலமாக இருகிறது. அதுமட்டுமின்றி ஃபிராங்க்ஃபுர்ட் விமான நிலையம், பிரதான தொடருந்து நிலையம் ஃபிராங்க்ஃபுர்ட் முற்சந்தி ஆகியவை மத்திய மையமாக போக்குவரத்துக்கு உதவுகிறது.

1875 ஆம் ஆண்டில் 100.000 குடிவாசிகளை எட்டியது. 1928 ஆம் ஆண்டில் 500.000 குடிவாசிகளைத் தாண்டியது.

பெயர்க்காரணம்

தொகு
 
பிராங்க்ஃபுர்டின் தலை சிறந்தோர்

பிரன்கோனோவர்ட் (பண்டைய செருமனி) அல்லது வதும் பிரான்கோரம் (லத்தின்) ஆகிய பெயர்கள்தான் 794ம் ஆண்டின் பதிவேடுகளில் காணப்படுகின்றன. இதுவே காலப்போக்கில் பிரான்க்போர்ட் மற்றும் பிரான்க்புர்த் என மறுவி, இறுதியில் பிராங்க்ஃபுர்ட் என்று உருமாறியது. 14ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை, தானே முதன்மையானவன் என்ற முன்னொட்டுப் பெயருடன் திரிந்து, 19ம் நூற்றாண்டின் தொடக்கலிருந்து, பிராங்க்ஃபுர்ட் என்ற பெயரே இன்று வரை நீடிக்கின்றது.

புவியியல்

தொகு

புவியமைப்பு

தொகு

பிராங்க்ஃபுர்ட் நகரானது, தனுஸ் மலைத்தொடரின் தென்கிழக்கில், மெயின் ஆற்றின் இருபுரமும் அமைந்துள்ளது. செருமனியின் தென்மேற்கு மாகாணமான அஸியின் மிகப்பெரும் மாநகராக விளங்குகின்றது. நகரின் தென் பகுதியில், பாதுகாக்கப்பட்ட காடுகள் உள்ளது. நகரின் மொத்த பரப்பளவாக 248.31 km (154.29 mi)ம், கிழக்கு மேற்காக 23.4 km (14.54 mi) வடக்கு தெற்காக 23.3 km (14.48 mi)ம் உள்ளது. நகரின் மையப்பகுதியானது, மெயின் ஆற்றின் வடக்கே அமைந்துள்ளது.

 
பிராங்க்ஃபுர்ட்'ன் 16 பகுதி மாவட்டங்கள்

பிராங்க்ஃபுர்ட் நகரானது, 46 நகர மாவட்டங்களாகவும், 118 பெருநகரங்களாகவும், 448 தோ்வு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 46 நகர மாவட்டங்களும் அரசியலைப்பிற்காக 16 பகுதி மாவட்டங்களாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

ஃபிராங்க்ஃபுர்ட் தமிழர்

தொகு

ஃபிராங்க்ஃபுர்டில் தமிழர்கள் 1983 ஆம் ஆண்டு முதற்கொண்டு புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். ஈழத்தில் போர் உருவான காலத்துக்கு முன்னமே தமிழர் இங்கு புலம் பெயர்ந்தனர் எனவும் பிற்பாடு பிற நகரங்களுக்கு குடிமாறியதும் பற்றிய சான்றுகள் இல்லாததால் எப்போது இருந்து தமிழர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பது சரியாகத் தெரியாது. இங்கு உள்ள உயர் கட்டிடங்களை வடிவமைக்க தென்னிந்திய கட்டிடக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அதில் தமிழக தமிழர்களும் அடங்குவார்கள். இதன்படி பார்த்தால் 1960 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்கள் இங்கு வாழ்ந்து வரவேண்டும். தமிழகத் தமிழர்கள் தமிழ் பண்பாட்டையும் மொழியையும் அடுத்த சந்ததிக்கு கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. 2009 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி 300 குடும்பங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களால் அங்கு தமிழ் மன்றம், தமிழ் இந்து மன்றம், தமிழ் பாடசாலை, தமிழர் பண்பாட்டுக் கழகம் இயங்கி வருகிறது. தமிழ் இந்து கிறித்துவக் கோவில் இருந்து வருகிறது.

அதோடு தமிழ் கடைகளில் இலங்கை இந்திய மற்றும் ஆசிய உணவுப் பொருட்கள் விற்று வருகிறார்கள். இங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அமைப்பிகள், தமிழ் பண்பாட்டைப் பேனுவதிலும், இங்கு பிறக்கும் பிள்ளைகளுக்குத் தமிழ் அறிவைக் கற்றுக் கொடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழ் கோவில்களில் தமிழில் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கிறித்துவ இந்து விசேச நாட்களில் மதப் பண்டிகைகள் பேனிப்பாதுகாத்து வரப்படுகிறது இங்கு உள்ள தமிழர்களால்.

தமிழ்க்கடைகளில் 1980 ஆம் ஆண்டு முதல் சமுதாய சந்திப்ப்பு இடமாக இருந்து வந்திருக்கிறது. அங்கு தாயகச் செய்திகளை பகிரும் இடமாக இருந்தது இங்கு தமிழர் தம் வர்த்தகத்தைப் பேனி வருகிறார்கள். தமிழர் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகிறது.

மே 17, 2009 ஆம் ஆண்டு ஈழமக்களின் துயரம் கண்டு, தமிழர்களால் பிரதான தொடருந்து நிலையம் முடக்கப்பட்டது வரலாற்றில் பதிவாகியது. பத்திரிக்கை வானொலி தொலைக்காட்சிகள் இந்த போராட்டத்தை ஒளி ஒலி பரப்பியது.

மேற்கோள்கள்

தொகு
  1. The FrankfurtRheinMain region – facts and figures பரணிடப்பட்டது 31 சனவரி 2017 at the வந்தவழி இயந்திரம் Retrieved 18 January 2017
  2. Regional Monitoring 2015. Facts and Figures – FrankfurtRheinMain Metropolitan Region பரணிடப்பட்டது 31 சனவரி 2017 at the வந்தவழி இயந்திரம் Retrieved 18 January 2017
  3. "Frankfurter Oberbürgermeister Feldmann endgültig abgewählt". Süddeutsche.de (in ஜெர்மன்). 11 November 2022. Archived from the original on 11 November 2022. பார்க்கப்பட்ட நாள் 11 November 2022.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்ஃபுர்ட்&oldid=4100827" இலிருந்து மீள்விக்கப்பட்டது