போர்ட்ரான்
போர்ட்ரான் அல்லது ஃபோர்ட்ரான் (Fortran, முன்னர் FORTRAN என்று தலைப்பெழுத்தில் இருந்தது) என்பது பொதுப்பயன்பாட்டுக்கான படிமுறையாக, ஆணைக்கோவைகளை நிரலாக எழுதி இயக்கப்படும் உயர்நிலைக் கணிமொழி. இது எண்கணிப்பாகத் தீர்வு காணவேண்டிய பணிகளுக்கு மிகச்சிறந்த மொழியாக நெடுங்காலமாகக் கருதப்பட்ட மொழி. ஃபோர்ட்ரான் மொழி ஐபிஎம் நிறுவனத்தின் கலிப்போர்னியாவில் உள்ள சான்ஃகொசே (San Jose) கிளையகத்தில்[1] 1950களில் அறிவியல் பொறியியல் பயன்பாட்டிற்காக வளர்த்தெடுக்கப்பட்டு, அத்துறைகளின் முதன்மையான மொழியாக அரை நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வந்த மொழி. இன்றும் செறிவாக எண்கணிப்புகள் செய்ய வேண்டிய பயன்பாடுகளுக்கு (எ.கா. வானிலை முற்கூறல் பணிகள், பாய்மவியல் கணிமை, வேதியியல் கணிமை போன்ற துறைகள்) இது விருப்பமான தேர்வாக உள்ளது. உயர்திறன் கணிமைகளுக்கு மிகவும் பரவலாக இன்றும் இது தேர்வாகும் மொழி[2]. உலகின் முவரிசை மீவிரைவுக் கணினிகளின் திறனை அளவீடு செய்யும் அளவலகு நிலைகளை (benchmarks) நிறுவி, வரிசைப்படுத்துவதிலும் இம்மொழி பயன்படுகின்றது.
நிரலாக்கக் கருத்தோட்டம்: | multi-paradigm: structured, imperative (procedural, object-oriented), generic |
---|---|
தோன்றிய ஆண்டு: | 1957 |
வடிவமைப்பாளர்: | சான் பேக்கசு (John Backus) |
வளர்த்தெடுப்பாளர்: | சான் பேக்கசு, ஐபிஎம் |
இயல்பு முறை: | strong, static, manifest |
முதன்மைப் பயனாக்கங்கள்: | Absoft, Cray, GFortran, G95, IBM, Intel, Lahey/Fujitsu, Open Watcom, Pathscale, PGI, Silverfrost, Oracle, XL Fortran, Visual Fortran, others |
பிறமொழித்தாக்கங்கள்: | Speedcoding |
கோப்பு நீட்சி: | .f , .for , .f90 , .f95 |
இம்மொழித்தாக்கங்கள்: | ALGOL 58, BASIC, C, PL/I, PACT I, MUMPS, Ratfor |
ஃபோர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslator) மொழி 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபிஎம் நிறுவனத்தைச் சார்த யோன் பேக்கசு என்பவர் இதை ஆக்கினார். ஃபோர்ட்ரான் மொழி பலவடிவங்களில் வளர்ந்து வந்துள்ளது. எழுத்துகளை அதிகமாகப் பயம்படுத்து பணிகளின் தேவைகளை நிறைவு செய்ய ஃபோர்ட்ரான் 77 (FORTRAN 77) என்னும் நிரல்மொழியும், பின்னர் வரிசையடுக்குகள் மொழியும் (array programming), தனித்துப் பொருத்தப்படவல்ல மாடுலர் நிரல் மொழியும், ஆப்சக்டு-ஓரியன்டடு மொழி எனப்படும் செயப்பாட்டுப் பொருள் அடிப்படை நிரல்மொழியும், பின்னர் ஃபோர்ட்ரான் 95 என்னும் மொழியும், இன்னும் பின்னர் பொதுமைக்கூறு நிரல்மொழியும் (ஃபோர்ட்ரான் 2003) என பல தற்காலக் கூறுகளைக் கொண்டு விரிவடைந்து வந்துள்ளது.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ "Math 169 Notes - Santa Clara University". Archived from the original on 2012-06-19. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.
- ↑ Eugene Loh (18 June 2010). "The Ideal HPC Programming Language". Queue (Association of Computing Machines) 8 (6). http://queue.acm.org/detail.cfm?id=1820518.