அஃதை தந்தை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோசர் குடித் தலைவன் அஃதை என்பவனின் தந்தை. இவனும் கோசர்குடித் தலைவன். கோசர்கள் பாண்டியரின் படை வீரர்கள் என்பதால்[1] இவனை எதிர்த்துப் போரிட்டு மாண்ட இருபெரு வேந்தர் சேர,சோழ எனக் கருத இடம் உண்டு. இவனைப் பற்றி சங்கப் பாடல்களில் வரும் குறிப்புகள் பின்வருமாறு.

பருவூர்ப் பறந்தலை என்னுமிடத்தில் போர். இருபெரு வேந்தர்களும் ஒன்றுகூடி ஒருபுறமும், அஃதையின் தந்தை மறுபுறமும் எதிர்நின்று போரிட்டனர். போரில் இருபெரு வேந்தர்களும் போர்க்களத்திலேயே மாண்டனர். அஃதை தந்தை வேந்தர்களின் களிறுகளைக் கவர்ந்தபோது எழுந்த ஆரவாரம் போல ஊர்மக்கள் தலைவன்-தலைவி உறவு பற்றிய அலர் வெளிப்படையாக இருந்ததாம். (மருதம் பாடிய இளங்கடுங்கோ - அகநானூறு 96)

மேற்கோள்கள்

தொகு
  1. புலவர்., கா. கோவிந்தனார் (திசம்பர் 1992). தமிழக வரலாறு கோசர்கள். (செய்யாறு.): எழிலகம். p. 40. ISBN 81-85703-14-0.{{cite book}}: CS1 maint: year (link)

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஃதை_தந்தை&oldid=4206526" இலிருந்து மீள்விக்கப்பட்டது