அகண்ட காவிரி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு இடத்தில் பாயும் காவிரி ஆற்றின் தோற்றம்

அகண்ட காவிரி என்பது காவிரி ஆறானது மைசூர்ப் பீடபூமியிலிருந்து இறங்கிக் கொங்கு நாட்டைக் கடந்து சோழ நாட்டை அடைந்து திருச்சிராப்பள்ளிக்கு அருகில் திருவரங்கத்தைச் சுற்றிக் காவிரி, கொள்ளிடம் என்று இரு ஆறுகளாகப் பிரிகிறது. அவ்வாறு பிரிவதற்கு முன்பு ஒன்றாக வரும் ஆறானது மிகவும் அகன்று காணப்படும். இப்பதியில் காணப்படும் கவிரி ஆறானது அகண்ட காவிரி என அழைக்கப்படுகிறது. அகண்டம் என்னும் சொல் இரண்டுபடாமல் ஒன்றாயிருப்பது என்று பொருள்படும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "அகண்ட காவிரி". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 7. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகண்ட_காவிரி&oldid=2676823" இலிருந்து மீள்விக்கப்பட்டது