அகதர் அதுஹைர்

உகாண்டாவைச் சேர்ந்த வழக்கறிஞர்

அகதர் அதுஹைர் ( Agather Atuhaire : பிறப்பு சுமார்1988) உகாண்டாவைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமைகள் பாதுகாவலரும் மற்றும் சுயாதீனப் பத்திரிகையாளரும் ஆவார். இவர் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்தினார். இவரது இச்செயல் ஐரோப்பிய ஒன்றிய தூதர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் அங்கீகாரத்தைப் பெற்றது. 2022 ஆம் ஆண்டிற்கான “ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் பாதுகாவலர் விருது” மற்றும் 2024 இல் சர்வதேச வீரதீர பெண்கள் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அகதர் அதுஹைர்
2024 இல் அகதர் அதுஹைர்
பிறப்புசீமா மாவட்டம் , உகாண்டா
தேசியம்உகாண்டா
கல்விமேக்கரேர் பல்கலைக்கழகம்
பணிஊடகவியளாளர்
அறியப்படுவதுஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்தியது

வாழ்க்கை தொகு

அகதர் அதுஹைர், 1988 இல் மேற்கு உகாண்டாவின் சீமா மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை மதுவுக்கு அடிமையானதால் இவருடைய குழந்தைப் பருவம் கடினமாக இருந்தது. மபராராவிலுள்ள் அலையன்சு பள்ளியில் உதவித்தொகைப் பெற்று தனது உயர்நிலைக் கல்வியை முடித்தார். பணப்பற்றாக்குறையால் சட்டப் படிப்பை மேற்கொள்வதற்கான தனது லட்சியத்தை இவரால் நிறைவேற்ற முடியவில்லை, அதனால் இவர் மேக்கரேர் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் பயின்றார்.[1]

ஜூன் 2022 இல், கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் துணை பிராந்தியத்தில் மனித உரிமை பாதுகாவலர்களைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் டிஃபென்ட்டிஃபென்டர் நிறுவனத்தால் இவர் மனித உரிமைப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார்.[1]

 
அகதர் அதுஹைர் சர்வதேச வீரதீர பெண்கள் விருது பெறுகிறார்.

2023 ஆம் ஆண்டில், உகாண்டாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஜான் சாடெக் மூலம் 2022 ஆம் ஆண்டிற்கான “ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் பாதுகாவலர் விருது” இவருக்கு வழங்கப்பட்டது. சட்ட மேம்பாட்டு மையத்தில் மாணவர்கள் விவரிக்க முடியாதபடி படிப்புகளில் தோல்வியடைகிறார்கள் மற்றும் மேல்முறையீடுகள் அல்லது விசாரணைகள் இல்லை என்பதைக் கண்டறிந்தார். இதற்காக அகதர் வழக்கறிஞரும் மற்றும் உகாண்டாவின் அரசியல்வாதியுமான அனிதா அங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மத்தியாஸ் மபுகா மற்றும் உள்ளூர் கழிவுநீர் நிறுவனத்துடன் போராடியுள்ளார். [2] அனிதா அமாங் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் பொதுப் பணத்தைப் பயன்படுத்தி விலையுயர்ந்த தானுந்துகளை வாங்கியதாக அகதர் வெளிப்படுத்தினார்.[3] இந்த ஊழலை அகதர் அம்பலப்படுத்தியதால் இவருக்கு அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன.[1]

விருது தொகு

மார்ச் 2024 இல் அமெரிக்க வெளியுறவுத்துறையால் வழங்கப்படும் சர்வதேச வீரதீர பெண் விருதுக்கு அங்கீகரிக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் 4 மார்ச் 2024 அன்று இந்த விருதை வழங்கினர்.[4] விழாவிற்குப் பிறகு, விருது பெற்றவர்கள் மாநிலத் துறையின் “சர்வதேச பார்வையாளர்கள் தலைமைத்துவத் திட்டத்தில்” பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். மேலும், அவர்களின் வேலையில் ஆர்வமுள்ள மற்றவர்களையும் சந்திக்கிறார்கள்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Human Rights Defender of the month: Agather Atuhaire - DefendDefenders" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-06-30. பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
  2. Independent, The (2023-05-04). "Agather Atuhaire bags EU's Human Rights Defender's Award". The Independent Uganda (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
  3. "Journalist Agather Atuhaire Is EU Human Rights Defenders Award Winner - The Pearl Times" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-05-05. பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
  4. "Africa: Uganda's Agather Atuhaire Wins International Women of Courage Award" (in en). https://allafrica.com/stories/202403060048.html. 
  5. "2024 International Women of Courage Award Recipients Announced". United States Department of State (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகதர்_அதுஹைர்&oldid=3910275" இலிருந்து மீள்விக்கப்பட்டது