ஜில் பைடன்

2021 முதல் அமெரிக்காவின் முதல் பெண்மணி

ஜில் ட்ரேசி ஜேக்கப்ஸ் பிடென் (Jill Tracy Jacobs Biden)[1] (பிறப்பு ஜூன் 3,1951) ஓர் அமெரிக்கக் கல்வியாளர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் 46வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஜோ பைடனின் மனைவி[2] என்பதால் 2021 முதல் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்து வருகிறார். இவரது கணவர் துணைத் தலைவராக இருந்தபோது 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக இருந்தார். 2009 முதல், வடக்கு வர்ஜீனியா சமூகக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து வருகிறார். மேலும் ஒரு துணைக் குடியரசுத் தலைவர் அல்லது குடியரசுத் தலைவரின் மனைவியாக தனது கணவரின் பெரும்பான்மையான பதவி காலத்தில் சம்பளம் பெறும் பதவியை வகித்தவர் என நம்பப்படுகிறது.

ஜில் பைடன்
2021 இல் ஜில் பைடன்
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
பதவியில் உள்ளார்
முதல் பெண்மணியாக
ஜனவரி 20, 2021
குடியரசுத் தலைவர்ஜோ பைடன்
முன்னையவர்மெலனியா திரம்ப்
அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி
இரண்டாவது பெண்மணியாக
ஜனவரி 20, 2009 – ஜனவரி 20, 2017
துணை அதிபர்ஜோ பைடன்
முன்னையவர்[லின் செனாய்
பின்னவர்கரண் பென்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜில் திரேசி ஜாக்கப்ஸ்

சூன் 3, 1951 (1951-06-03) (அகவை 73)
ஹாம்மன்ட்டன், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
துணைவர்கள்
  • பில் இசுடீவன்சன்
    (தி. 1970; divorce 1975)
  • ஜோ பைடன் (தி. 1977)
பிள்ளைகள்ஆஷ்லே பைடன்
உறவினர்பைடன் குடும்பம்
வாழிடம்வெள்ளை மாளிகை
கல்விடெலாவேர் பல்கலைக்கழகத்தில் (இளங்கலை, கல்வியியல்)
வெஸ்ட் செஸ்ட்டர் பல்கலைக்கழகம் (முதுகலை கல்வியியல்)
விலனோவா பல்கலைக்கழகம் (முதுகலை)
கையெழுத்து
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்டெலாவேர் தொழினுட்பம் & சமூகக் கல்லூரி
வடக்கு வர்ஜீனியா சமூகக் கல்லூரி

ஜில் பைடன் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், வெஸ்ட் செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் வில்லனோவா பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார். பதின்மூன்று ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் வாசிப்பைக் கற்பித்தார். மனநல மருத்துவமனையில் உணர்ச்சி குறைபாடுகள் உள்ள இளம் பருவத்தினருக்கு கற்பித்தார். இதைத் தொடர்ந்து, டெலாவேர் தொழில்நுட்பம் & சமூகக் கல்லூரியில் பதினைந்து ஆண்டுகள் ஆங்கிலம் மற்றும் எழுத்து பயிற்றுவிப்பாளராக இருந்தார்.

சுயசரிதை

தொகு

நியூ செர்சியின் ஹம்மன்டனில் பிறந்த இவர், பென்சில்வேனியாவின் வில்லோ குரோவ் நகரில் வளர்ந்தார். 1977 இல் ஜோ பைடனை மணந்தார். ஜோ பைடனின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த இரண்டு மகன்களான பியூ மற்றும் ஹண்டரின் மாற்றாந்தாய் ஆனார். ஜோ பைடன் மூலம் இவருக்கு 1981 இல் ஆஷ்லே பைடன் என்ற மகளும் உள்ளார். ஜில் பைடன், இலாப நோக்கற்ற அமைப்பான ஜோ பைடன் மார்பக சுகாதாரத்திட்டத்தின் நிறுவனரும், புத்தக நண்பர்கள் திட்டத்தின் இணை நிறுவனரும், பைடன் அறக்கட்டளையின் இணை நிறுவனரும் ஆவார்.[3][4][5]மிசெல் ஒபாமாவுடன் சேர்ந்து வெளிநாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க ஆயுதப்படை உறுப்பினர்களின் குடும்பங்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு ஆதரவளிக்க முயலும் திட்டத்திலும் தீவிரமாக உள்ளார். மேலும் இவர் ஒரு நினைவுக் குறிப்பு மற்றும் இரண்டு சிறுவர் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

2008 குடியரசுத் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு

தொகு

உத் தலைவர்[6] ஈராக் போரை தனிப்பட்ட முறையில் எதிர்த்த போதிலும், 2004 குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது கணவர் போட்டியிடுவதை இவர் விரும்பவில்லை. வயிற்றில் "இல்லை" என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட நீச்சலுடை அணிந்து போர் நிறுத்த சாத்தியம் பற்றி விவாதிக்கும் ஒரு முக்கியக் கூட்டத்தில் இவர் நுழைந்தார்.[7] ஆனால் 2004 இல் ஜார்ஜ் வாக்கர் புஷ் மீண்டும் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் தனது கணவரை மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட வலியுறுத்தினார்.[8][8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr. Jill Biden: First Lady". White House. Archived from the original on August 6, 2022. பார்க்கப்பட்ட நாள் August 6, 2022. Jill Tracy Jacobs Biden was born on June 3, 1951, in Hammonton, New Jersey, to Bonny Jean Godfrey Jacobs and Donald Carl Jacobs. ...
  2. Inside Edition Staff (September 22, 2020). "Jill Biden Denies Ex-Husband's Claim She Had Affair With Joe Biden Before They Split". Inside Edition இம் மூலத்தில் இருந்து September 24, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924060153/https://www.insideedition.com/jill-biden-denies-ex-husbands-claim-she-had-affair-with-joe-biden-before-they-split-61971. 
  3. Churnin, Nancy (August 23, 2008). "Obama's VP pick, Joe Biden, could heighten breast cancer awareness". The Dallas Morning News இம் மூலத்தில் இருந்து July 11, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120711194506/http://fitnessblog.dallasnews.com/archives/2008/08/expect-more-breast-cancer-awar.html. 
  4. "About Us". Biden Breast Health Initiative. Archived from the original on April 10, 2009. பார்க்கப்பட்ட நாள் February 4, 2009.
  5. "Dr. Jill Biden". வெள்ளை மாளிகை. Archived from the original on சனவரி 22, 2009. பார்க்கப்பட்ட நாள் சனவரி 22, 2009.
  6. Glueck, Katie; Eder, Steve (February 2, 2020). "In Iowa, a Former Second Lady Campaigns to Be the First". த நியூயார்க் டைம்ஸ்: p. A16 இம் மூலத்தில் இருந்து July 19, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200719231401/https://www.nytimes.com/2020/02/01/us/politics/joe-jill-biden-2020.html. 
  7. Copeland, Libby (October 23, 2008). "Campaign Curriculum". தி வாசிங்டன் போஸ்ட் இம் மூலத்தில் இருந்து November 7, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101107160055/http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/10/22/AR2008102203657.html. 
  8. 8.0 8.1 Norris, Michelle (January 1, 2008). "Presidential Candidates' Spouses: Jill Biden". All Things Considered இம் மூலத்தில் இருந்து June 8, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200608143807/https://www.npr.org/transcripts/17764989. 
  9. "Democrat Candidate Spouses: Jill Biden". டைம். September 13, 2007 இம் மூலத்தில் இருந்து August 24, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080824045651/http://www.time.com/time/specials/2007/article/0,28804,1660946_1661078,00.html. 

மேலும் படிக்க

தொகு
  • Julie Pace and Darlene Superville, Jill: A Biography of the First Lady (New York: Little, Brown and Company, 2022).

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜில் பைடன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜில்_பைடன்&oldid=3909211" இலிருந்து மீள்விக்கப்பட்டது