மிசெல் ஒபாமா

மிசெல் லவான் இராபின்சன் ஒபாமா (Michelle LaVaughn Robinson Obama, சனவரி 17, 1964) அமெரிக்க வழக்கறிஞரும் எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவரும் தற்போது பதவியில் உள்ளவருமான பராக் ஒபாமாவின் மனைவியும் முதல் ஆபிரிக்க-அமெரிக்க முதல் சீமாட்டியும் ஆவார். சிகாகோவின் தென்பகுதியில் வளர்ந்த மிசெல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் ஆர்வர்டு சட்டப்பள்ளியிலும் படித்தவர். தனது துவக்க கால சட்டம்சார் பணியை சிட்லி ஆசுட்டீன் என்ற சட்டநிறுவனத்தில் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணி புரிகையில்தான் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். பின்னர் சிகாகோ நகரத்தந்தை ரிச்சர்டு எம் டேலியின் அலுவலகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.

மிசெல் ஒபாமா
Michelle Obama 2013 official portrait.jpg
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 20, 2009
குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா
முன்னவர் லாரா புஷ்
தனிநபர் தகவல்
பிறப்பு மிஷெல் லவான் இராபின்சன்
சனவரி 17, 1964 (1964-01-17) (அகவை 56)
டெயங், இலினொய், ஐ.அ.
(தற்போது காலுமெட் பூங்கா)
அரசியல் கட்சி மக்களாட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
பிள்ளைகள் மாலியா
சாஷா
படித்த கல்வி நிறுவனங்கள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
சமயம் சீர்திருத்தத் திருச்சபை (விவரங்களுக்கு)
கையொப்பம்

2007 , 2008களில் மிசெல் தனது கணவரின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கானப் பரப்புரையில் துணை நின்றார். 2008, 2012ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாடுகளில் முதன்மை உரையாற்றினார். ஒபாமா இணையருக்கு இரு மகள்கள் உள்ளனர். மிசெல் ஒபாமா பெண்களுக்கான வழிகாட்டியாகவும் புதுப்பாங்கு சின்னமாகவும் விளங்குகின்றார். வறுமை உணர்திறன், ஊட்டச்சத்து, உடற்றிறன் பயிற்சிகள், மற்றும் நலவாழ்வு உணவு ஆகியவற்றிற்குப் பரப்புரை ஆற்றி வருகின்றார்.[1][2]

மேற்சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Michelle Obama
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசெல்_ஒபாமா&oldid=2904920" இருந்து மீள்விக்கப்பட்டது