அகன்சா குமாரி

அகன்சா குமாரி (Akanksha Kumari) ஜவஹர் நவோதயா வித்யாலயாவின் மேனாள் மாணவியும், பிர்சா தொழில் நுட்ப நிறுவனத்தில் (சிந்த்ரி) இளநிலைப் பொறியியல் பட்டம் பெற்றவரும் ஆவார். ஹசாரிபாக்கினைச் சேர்ந்த அகன்சா குமாரி, இந்தியாவில் நிலத்தடி சுரங்கத்தில் பணிபுரியும் முதல் இந்தியப் பெண் பொறியாளர் ஆவார். 2021ஆம் ஆண்டில் இவர் வடக்கு கரன்புரா பகுதியில் உள்ள சூரி சுரங்கத்தில் மத்திய நிலக்கரி வயல்களில் பணியமர்த்தப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகன்சா_குமாரி&oldid=3880246" இலிருந்து மீள்விக்கப்பட்டது