ஹசாரிபாக்
ஹசாரிபாக், (Hazaribagh) இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் வடக்கு சோட்டநாக்பூர் கோட்டத்தின் அமைந்த ஹசாரிபாக் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். ஹசாரிபாக் நகரத்திலிருந்து 17 கிமீ தொலைவில் கசாரிபாக் தேசியப் பூங்கா உள்ளது.
ஹசாரிபாக்
हज़ारीबाग़ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 23°59′N 85°21′E / 23.98°N 85.35°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்க்கண்ட் |
மாவட்டம் | ஹசாரிபாக் மாவட்டம் |
ஏற்றம் | 610 m (2,000 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,86,139 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, உருது, சந்தாலி, ஹோ மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | |
வாகனப் பதிவு | JH-02 |
இணையதளம் | hazaribag |
பெயர்க் காரணம்
தொகுபாரசீக மொழியில் ஹசாரி என்பதற்கு ஆயிரம் என்றும், பாக் என்பதற்கு தோட்டம் என்றும் பொருள். எனவே ஹசாரிபாக் நகரத்தை ஆயிரம் தோட்டங்களின் நகரம் என அழைக்கப்படுகிறது.
புவியியல்
தொகுதாமோதர் ஆற்றின் துணை ஆறான கோனார் ஆறு ஹசாரிபாக் நகரத்தில் பாய்கிறது. ஹசாரிபாக் நகரம் காடுகளால் சூழப்பெற்றது.
பொருளாதாரம்
தொகுதொழில்
தொகுஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத்திற்கு பின்னர், இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கங்கள் ஹசாரிபாக்கில் உள்ளது. கொண்டது. இங்கு வெட்டப்படும் நிலக்கரியைக் கொண்டு தேசிய அனல் மின் நிறுவனம் ஆண்டிற்கு 3,000 மெகா வாட் மின்சாரமும், ரிலையன்ஸ் நிறுவனம் 3,600 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்கிறது. மைக்கா சுரங்கங்களும் ஹசாரிபாக்கில் உள்ளது.
போக்குவரத்து
தொகுமூன்று நடைமேடைகள் கொண்ட ஹசாரிபாக் ரோடு தொடருந்து நிலையம்[1] மாநிலத் தலைநகர் ராஞ்சி மற்றும் மாநிலத்தின் பிற நகரங்களையும் இருப்புப்பாதை வழியாக இணைக்கிறது.
- பேருந்து நிலையம்
ராஞ்சி, கொல்கத்தா, தன்பாத், பாட்னா மற்றும் அருகில் உள்ள நகரங்களுக்கு சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- வானூர்தி நிலையம்
பிர்சா முண்டா வானூர்தி நிலையம், ஹசாரிபாக் நகரத்திலிருந்து 96 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
தொகுசதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹசாரிபாக் நகரத்தின் 2011 -ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,42,489 ஆகும். அதில் ஆண்கள் 74,132; பெண்கள் 68,357 ஆக உள்ளனர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு, 922 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு பெற்றவர்கள் 1,12,533 (89.36 %) ஆவர். ஆண் எழுத்தறிவு 60,840 (92.98 %) ஆகவும்; பெண் எழுத்தறிவு 51,693 (85.44 %) ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 16,555 ஆக உள்ளது. [2]
ஹசாரிபாக் நகரத்தில் இந்துக்கள் 1,06,340 (74.63%) இசுலாமியர்கள் 28,352 (19.90 %); சமணர்கள் 1,548 (1.09%); கிறித்தவர்கள் 4,575 (3.21 %); மற்றவர்கள் 1.17% ஆக உள்ளனர்.
இந்நகரத்தில் இந்தி, உருது, சந்தாலி, ஹோ மொழிகள் பேசப்படுகிறது.