அகன்ற தமிழ்நாடு

தமிழ் தேசிய கருத்தியல்

அகன்ற தமிழ்நாடு என்பது தமிழ் தேசியத்தின் ஒரு தாயக கருத்தாகும், இது இந்திய ஒன்றியத்தின் தமிழ் பேசும் பகுதிகளையும் ("முதன்மை நிலப்பரப்பு") மற்றும் இலங்கை ("தீவு") தமிழ்ப் பகுதிகளையும் இணைப்பதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு தேசிய தாயகத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இருப்பினும் இந்தப் பகுதிகளின் வடக்குப் பகுதியில் பெருமளவில் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்களும், தென்மேற்கில் மலையாள மொழி பேசும் மக்களும், தீவில் சிங்கள மக்கள் உள்ளனர். 1958 ஆம் ஆண்டில் சி. பா. ஆதித்தனார் தலைமையிலான நாம் தமிழர் மற்றும் தமிழக விடுதலை முன்னணி (டி.என்.எல்.எஃப்) மற்றும் 1980 களின் பிற்பகுதியில் தமிழ் தேசிய மீட்பு படையினர் (டி.என்.ஆர்.டி) போன்ற பல்வேறு தமிழ் குழுக்களால் அகன்ற தமிழ்நாடு என்ற கருத்தாக்கம் முன்மொழியப்பட்டது. [1]

இன்றைய இந்தியா மற்றும் இலங்கைத் தீவில் தமிழ் பேசும் பகுதிகளை உள்ளடக்கிய பாண்டியப் பேர்ரசின் அதிகபட்ச அளவு.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Dynamics of Tamil Nadu Politics in Sri Lankan Ethnicity (2003) by Ganapathy Palanithurai, K. Mohanasundaram, p.44
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகன்ற_தமிழ்நாடு&oldid=3597917" இலிருந்து மீள்விக்கப்பட்டது