அகப்பேய்ச் சித்தர்
தமிழ்நாட்டின் சித்தர்களில் ஒருவர்
அகப்பேய்ச் சித்தர் தமிழ் நாட்டுச் சித்தர்களில் ஒருவர்.[1] பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கணிக்கப்படுபவர். இவரது வரலாறோ அன்றிக் காலமோ இதுவரை துணியப்படவில்லை.
அகப்பேய் சித்தர் | |
---|---|
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அகப்பேய் சித்தர் பாடல்கள் |
மொழி | தமிழ் |
அகப்பேய்ச் சித்தர் பாடல் என இவர் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தத்துவஞானத்தை உருவகத்தில் பாடியவர். "அகப்பேய்" என்ற விளி பாடல் தோறும் காணப்பெறுவதால் அகப்பேய்ச் சித்தர் என இவர் பெயர் பெற்றிருக்கலாம். மனதைப் பேயாக உருவகம் செய்து பல பாடல்களில் அறிவுரையும் உபதேசமும் செய்கிறார். ஆதலால் இவர் அப்பெயரைப் பெற்றதாகவும் கூறுவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்". http://www.siththarkal.com. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2016.
{{cite web}}
: External link in
(help)|publisher=