அகலாவோனைசு
அகலாவோனைசு (Aglaonice) or தெசாலியின் அகலாவோனைசு (Aganice of Thessaly) (பண்டைக் கிரேக்கம்: Ἀγλαονίκη, Aglaoníkē) பண்டைய கிரேக்க வானியலாளர். இவர் கி.மு இரண்டாம் அல்லது முதல் நூற்றாண்டில் வாழ்ந்தார்.[1] இவர் புளூடார்க்கின் எழுத்துகளில் பெண் வானியலாளராகக் குறிப்பிடப்படுகிறார்[2] சுகோலியா, உரோடுசுவின் அபொல்லோனியசு ஆகியோரும் இவரைப் பெண் வானியலாளராகக் குறிப்பிடுகின்றனர்[3] இவர் தெசாலியின் எகேத்தர் அல்லது எகேமோனின் மகளாகவும் குறிப்பிடப்படுகிறார். இவர் வானில் இருந்து நிலாவை மறையச் செய்யும் சூனியக்காரி அல்லது மாயமந்திரப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். இந்நிலை இவர் நிலா ஒளிமறைப்பு நேரும் காலத்தையும் இடத்தையும் பற்றிய அறிவுள்ளவராக நினைக்கத் தோன்றுகிறது.[4][5]
அகலாவோனைசு பற்றிய ஒரு பழமொழி: "ஆம், அகலாவோனைசுக்கு அடங்கும் நிலா போல" இவரது பெருமையைச் சாற்றுகிறது.[6] இவரோடு தொடர்புடைய பல கணியம் சொல்லும் அல்லது குறிசொல்லும் பெண்மணிகள் சூனியக்காரிகளாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் "தெசாலியின் சூனியக்காரிகள்" என வழங்கப்படுகின்றனர். " கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து முதல் நுற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இவர்களின் செயல்பாடுகள் அதிகமிருந்ததாக கருதப்படுகிறது.[6]
பிளாட்டோவின் ஜார்ஜியாசு உரையாடலில் சாக்ரட்டீசு " தெசாலியக் குறிசொல்லிகள் பற்றி அவர்களது சொந்த இடரில் நிலாவைத் துறக்கத்தில் இருந்து (வானில் இருந்து) நிலத்துக்குக் கொணரவல்லவர்களாக குறிப்பிடுகிறார்."[7]
இவரைப் பற்றி புளூடார்க் பின்வருமாறு எழுதுகிறார். "இவர் முழுநிலாக்களாக ஏற்படும் ஒளிமறைப்பின் கால அளவை அதாவது அவற்றின் நிகழ்வுநேரத்தையும் முழுமையாக அறிந்தவராகவும் புவியின் நிழல் நிலாவை மறைக்கும் சரியான நேரத்தை முன்கூட்டியே அறிந்தவராகவும் அதனால் பெண்கள் இவர் நிலாவை விண்ணகத்தில் இருந்து மண்ணகத்துக்குக் கொணரவல்லவராகக் கருதியதையும் " கூறுகிறார்[8]
வெள்ளியின் ஒரு குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[6] இவர் ஜான் கோட்டியூ எடுத்த ஆர்ப்பசு திரைப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். இவர் அதில் இயுரிடைசுவின் தோழியாகவும் பெண்கள் குழுவின் தலைவியாகவும் வருகிறார். இவர் ஜூடி சிகாகோவின் மதிய உணவுப் பந்தி எனும் நிறுவல் ஓவியத்தில் மரபு நினைவு முற்றத்தில் உள்ள 999 பெண்களில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Peter Bicknell: "The witch Aglaonice and dark lunar eclipses in the second and first centuries BC." In: Journal of the British Astronomical Association, Bd. 93, Nr. 4, pp. 160–163, Bibcode: 1983JBAA...93..160B
- ↑ Coniugalia praecepta 48 = 145c, De defectu oraculorum 13 = 417a
- ↑ Scholion to Argonautica 4.59
- ↑ Ogilvie, Marilyn Bailey (1986). Women in Science. The MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-15031-X.
- ↑ Schmitz, Leonhard (1867), "Aganice", in Smith, William (ed.), Dictionary of Greek and Roman Biography and Mythology, vol. 1, Boston, p. 59, archived from the original on 2010-06-16, பார்க்கப்பட்ட நாள் 2017-06-13
{{citation}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ 6.0 6.1 6.2 Howard, Sethanne (2008). Hidden Giants (2nd ed.). Lulu.com. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781435716520.
- ↑ Gorgias
- ↑ Plutarch, Conjugalia Praecepta
- ↑ "Aglaonice". Elizabeth A. Sackler Center for Feminist Art: The Dinner Party: Heritage Floor: Aglaonice. Brooklyn Museum. 2007. பார்க்கப்பட்ட நாள் 17 December 2011.
- This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: "article name needed". Dictionary of Greek and Roman Biography and Mythology. (1870).