அகஸ்டா வெஸ்ட்லேண்ட் உலங்கூர்தி சர்ச்சை

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் உலங்கூர்தி சர்ச்சை (Augusta Westland VVIP chopper deal) என்பது 2010 ஆம் காலகட்டங்களில் இந்திய அரசின் உயர்பதவிகளில் இருக்கும் முக்கிய நபர்களுக்காக உலங்கூர்தி வாங்கலில் நிகழ்ந்த ஊழல் குற்றச்சாட்டாகும்.[1] அரசியல் முக்கியப் பிரமுகர்களுக்காக இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட்டிம் அதிநவீன ஏ.டபியூ101 ரக உலங்கூர்திகள் 3,600 கோடி மதிப்பில் மொத்தம் 12 வாங்க காங்கிரஸ் அரசு முடிவு செய்தது.[2] ஆனால் இந்த ஒப்பந்ததிற்காகத் தரகுத்தொகை கைமாற்றப்பட்டதாகப் புகார் எழுந்ததை அடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. 2014 ஜூன் வரை 45% பணத்தை அதாவது 2,068 கோடி அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறப்பட்டது.[3]

சட்டவிரோதமாகப் பணம் கைமாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டி முன்னாள் தலைவர் ஜியுஸ்ப்பே ஒர்ஷி மற்றும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் சிஇஓ புருனோ ஸ்பக்னோலினி போன்றோர் இத்தாலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இத்தாலி நீதிமன்றத்தில் அகஸ்டா நிறுவனத்தின் மீது வழக்கு விசாரணை நடைபெற்று, 2018 ஜனவரி 8 விடுவிக்கப்பட்டனர். இடைத்தரகராகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் அமீரக நீதிமன்றத்தால் நாடுகடத்தப்பட்டு, இந்தியாவில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.[4] மேலும் ராஜிவ் சக்சேனா என்பவரும் கைது செய்யப்பட்டு புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

நிகழ்வுகள் தொகு

  • 2013 மார்ச் 25, "ஆம், இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது, லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது, புலனாய்வுத்துறை இதைத் தீவிரமாக விசாரிக்கும்." என அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. ஆண்டனி தெரிவித்தார்.[5]
  • €30 மில்லியன் கையூட்டாக இந்திய அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கியதை உறுதி செய்து, 2016 ஏப்ரல் 8 இத்தாலியின் மிலன் நகர நீதிமன்றம் ஒர்ஷிக்கு நான்கரை ஆண்டுகளும், ஸ்பங்னோலினிக்கு நான்கு ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்தது.[6]
  • மிலன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, போதிய ஆதரம் இல்லாததால் 2018 ஜனவரியில் ஒர்ஷி மற்றும் ஸ்பங்னோலினியை வழக்கிலிருந்து விடுதலை பெற்றனர்.[2]


மேற்கோள்கள் தொகு

  1. "CBI gets Michel custody: Bank linked to payoff taken over, account details are missing". Indian Express. 5 December 2018. https://indianexpress.com/article/india/bank-linked-to-payoff-taken-over-account-details-are-missing-5480551/. பார்த்த நாள்: 6 December 2018. 
  2. 2.0 2.1 "அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை - இத்தாலி நீதிமன்றம் விளக்கம்". புதியதலைமுறை. http://www.puthiyathalaimurai.com/news/world/51812-no-evidence-of-corruption-italian-court-s-detailed-order-in-agustawestland-vvip-chopper-deal.html. பார்த்த நாள்: 14 February 2019. 
  3. "India recovers Rs.1818 crore from Agusta Westland". http://indiatoday.intoday.in/story/chopper-scam-india-recovers-1818-crore-from-agustawestland/1/365727.html. பார்த்த நாள்: 8 June 2014. 
  4. "Why Christian Michel is crucial in AgustaWestland scam probe". இந்தியா டுடே. https://www.indiatoday.in/india/story/why-christian-michel-is-crucial-in-agustawestland-scam-probe-1343539-2018-09-19. பார்த்த நாள்: 14 February 2019. 
  5. "Bribes were taken in the VVIP helicopter deal, admits Defence Minister AK Antony". India today. 25 March 2013. http://indiatoday.intoday.in/story/chopper-scam-helcopter-deal-was-tainted-admits-ak-antony/1/259311.html. பார்த்த நாள்: 19 March 2013. 
  6. "CBI Seeks Italian Court's Order On AgustaWestland Graft". NDTV.com. 27 April 2016. பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.