அகிலா கிசோர்
அகிலா கிசோர், தமிழ், கன்னடத் திரைப்படங்களில் நடித்துவரும் இந்தியத் திரைப்பட நடிகையாவார். 2013ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான பாதே பாதேவில் நாயகியாக அறிமுகமானார். 2014ஆம் ஆண்டு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தில் நடித்ததற்காகப் பெரிதும் பேசப்பட்டார்.[1]
அகிலா கிசோர் | |
---|---|
பிறப்பு | 1990 பெங்களூர், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2013–தற்போது வரை |
நடிப்பு
தொகுகணிப்பொறிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, அழகுக்கலை நிறுவனங்களில் மாதிரியாகப் பணிபுரியத் துவங்கினார். [2][3] பெமினா மிஸ் இந்தியா பெங்களூர் 2013 விருதை வென்ற பிறகு, பாதே பாதே என்ற கன்னடத் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.[4] அதன்பிறகு இரா. பார்த்திபன் இயக்கத்தில் வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தில் நடித்தார்.[5] இத்திரைப்படத்தில் இவருடைய நடிப்பிற்குப் பெரிதும் வரவேற்பு கிடைத்தது. அதனுடைய அடுத்த பாகத்திலும் நடிக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார்.[6]
2015ஆம் ஆண்டு சூன் மாதத்தில் வெளியான சந்தானத்தின், இனிமே இப்படித்தான் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.[7] இவர் நடித்த காலபைரவா, பாய்ஸ், ஆகிய இரண்டு கன்னடத் திரைப்படங்கள் 2015ஆம் ஆண்டு வெளியாக உள்ளன.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
2013 | பாதே பாதே | காஞ்சனா | கன்னடம் | போட்டியாளர், தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் - சிறந்த கன்னட அறிமுக நடிகை |
2014 | கதை திரைக்கதை வசனம் இயக்கம் | தாக்ஷா | தமிழ் | போட்டியாளர், விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை) |
2015 | இனிமே இப்படித்தான் | அகிலா | தமிழ் | |
மூன்றாம் உலகப் போர் | தமிழ் | படப்பிடிப்பில் | ||
கதை இருக்கு | தமிழ் | படப்பிடிப்பில் | ||
காலபைரவா | கன்னடம் | படப்பிடிப்பில் | ||
பாய்ஸ் | கன்னடம் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "What's next for Akhila Kishore?". sify.com. Archived from the original on 2014-08-28. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.
- ↑ "Techies and doctors invade silver screen in Karnataka - The Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.
- ↑ "Five heroines in Boys, but no cat-fights yet: Akhila Kishore - The Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.
- ↑ "Review: Pade Pade is a neat entertainer - Rediff.com Movies". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.
- ↑ "I want to do more films across genres: Akhila Kishore - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.
- ↑ "Akhila Kishore Joins Kadhai Irukku | Silverscreen.in". silverscreen.in. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.
- ↑ "Actress Akhila Kishore on her experiences working in Inimae Ippadithaan and with Santhanam". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.