அகில இந்திய விவசாயிகள் சங்கம்
அகில இந்திய விவசாயிகள் சங்கம் (All India Kisan Sabha)இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமை அரசியல் சார்புள்ள, விவசாயிகள் சங்கம் ஆகும்.
சுருக்கம் | AIKS |
---|---|
உருவாக்கம் | 11 ஏப்ரல் 1936 |
வகை | விவசாயிகள் அமைப்பு |
சேவை பகுதி | இந்தியா |
சார்புகள் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
வலைத்தளம் | https://kisansabha.org/ |
வரலாறு
தொகுஅகில இந்திய விவசாயிகள் சங்கம் முதலில் பீகாரில் சுவாமி சகஜானந்த சரஸ்வதி தலைமையின் கீழ் 1929 ல் உருவாக்கப்பட்டது. பீகார் மாநிலத்தில் விவசாயிகளின் அடிப்படை உரிமைகள், உழும் நிலங்களை பாதுகாத்தல், அந்த காலத்தில் ஜமீன்தார் தாக்குதல்களுக்கு எதிராக விவசாயிகளை அணிதிரட்ட வேண்டும், விவசாயி குறைகளை போக்க அணிதிரட்ட வேண்டும், என்ற நிலையில் விவசாயிகள் இயக்கம் உருவாகியது.ஏப்ரல் 11, 1936 அன்று சுவாமி சகஜானந்த சரஸ்வதி அதன் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் ரங்கா, இ. எம். எஸ். நம்பூதிரிபாத்து (EMS Namboodiripad), பண்டிட் கர்யானந் (Karyanand) சர்மா, பண்டிட் யமுனா கர்ஜி, பண்டிட் யதுநந்தன் (Yadunandan) (Jadunandan) சர்மா, போன்ற முக்கிய தலைவர்களும் தொடர்பு குழு உறுப்பினர்கள் என ராகுல் சங்கிருத்தியாயன் , பி . சுந்தரய்யா , ராம் மனோகர் லோஹியா , ஜெயப்பிரகாஷ் நாராயண் , ஆச்சார்யா நரேந்திர தேவ் மற்றும் பங்கிம் முகர்ஜி.[1]
வெளி இணைப்பு
தொகு[https://web.archive.org/web/20140419233347/http://www.pragoti.in/node/2524 பரணிடப்பட்டது 2014-04-19 at the வந்தவழி இயந்திரம்] [1]