அகி மக்கள்
அகி (akie pepole) எனும் ஆதி குடியினரான இவர்கள் மொஸிரோ என்றும் அழைக்கப்படுவர். இனத்தாலும், மொழியாலும் தன்சானியாவைச் சேர்ந்த அகி’க்கள் மேற்கு அருஷா (ஆப்பிரிக்க) பகுதியில் வசிக்கின்றனர். 2000 ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி எஞ்சியுள்ள இவர்களது மக்கட்தொகை 5268.[1] கென்யாவிலும், தான்சான்யாவிலும் உள்ள பிற வேட்டை – சேகரிப்பினரைப் போலவே அகி’க்களும் டோர்போ (அ) வான்டோர்போ கேவலமாக அழைக்கப்படுகின்றனர். அகி, பிபிசி தொலைக்காட்சியில் TRIBE தொடரில் (10 பிரிவில் 2007) புரூஸ்பெர்ரியால் காட்டப்பட்டுள்ளனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(5,200) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தென் கிழக்கில் 150 மைல்கள் [1] | |
மொழி(கள்) | |
அகிக்கள் மாசாய் மொழியும் பேசுகின்றனர் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
Ogiek - தங்களது தன்சானிய உறவினர்களான கொய்சான் மொழி பேசும் பெர்ல்களைப் போல வேட்டை-சேகரிப்புக் கலாச்சாரம் உடையவர்கள் |
வாழ்க்கை முறை
தொகுஆப்பிரிக்க சவான்னா காடுகளில் எஞ்சியுள்ள சிறிய இனப்பிரிவினர் அகி’க்கள். இவர்கள் வேட்டையாடுவதுடன் நீரைப் பீய்ச்சியடித்துத் தேனீக்களைத் துரத்தி விடுகின்றனர். தேனீக்கள் செயற்கைத் தேன்கூட்டை அடைய அகி’க்கள் தேனைப் பிழிந்து கொள்வார்கள். தேனைப் பயன்படுத்தி தயாரிக்கும் பீரைக் குடித்துக் களிப்புறுவார்கள். மாஸாய் என்ற இனக்குழுவினர் தங்களுக்குப் போட்டியாக வந்து விட்டதால் அகி’க்கள் வேட்டையாடுதல் தேன் சேகரிப்போடு சோளம் பயிரிடலிலும் இறங்கி விட்டனர். இருந்தாலும் கடந்த ஆண்டு வரைக்கும் அதையும் போதிய அளவிற்கு உற்பத்தி செய்ய முடிந்ததில்லை.[2]
தான்சானியாவின் வடக்குப் பகுதிக்கு அப்பால் இன்னும் குறிப்பாக கென்யாவில் வசிக்கும் ஓஜியிக் என்ற குழுவினருக்கு இனரீதியாகவும், மொழிரீதியாகவும் மிக நெருக்கமான உறவுடையவர்கள் அகிக்கள். இவர்கள் விவசாயிகளாக இருந்திருக்கக் கூடும். ஆனால் தெற்கு நோக்கித் துரத்தப்பட்டதால் வேறுவழியில்லாமல் வேட்டை – சேகரிப்பு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.[1] மாஸாய் சதுப்புநிலம் வரை அகிக்கள் பரவியிருந்தனர். ஆனால் தற்போது காடழிப்பினாலும், பிற வேட்டைக்காரர்களாலும் இயற்கை ஆதாரங்கள் குறைந்து விட்டதால் கெடுவினையாக நிலத்திற்கும் நீருக்கும் மாஸாய்களுடன் வாதுக்கு நிற்கும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.
மொழி
தொகுஅகிக்களின் சொந்த மொழியும் அகியென்றே அழைக்கப்படுகிறது. அழிவின் விளிம்பிலுள்ள அகி மொழியை மிகச்சில வயதானவர்கள் மட்டுமே பேசுகின்றனர். இம்மக்கள் மாஸாய் மற்றும் ஸ்வாஹிலி மொழிகளைப் பேசத் தலைப்பட்டு விட்டனர். அகி பேசுவோரின் எண்ணிக்கை மொழி அங்கீகாரத்திற்கு உரிய அளவில் இல்லை. இளந்தலைமுறையினர் அகியைத் தட்டுத் தடுமாறித்தான் பேசுகின்றனர்.
குறிப்புகள்
தொகுபுற இணைப்புகள்
தொகு- Ogiek.org பரணிடப்பட்டது 2021-07-24 at the வந்தவழி இயந்திரம்