அகைப்பு வண்ணம்
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
அகைப்பு வண்ணம் என்பது செய்யுளின் நடையில் அறுபட்டு அறுபட்டு நடக்கும்.
- இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தை
அடைய அசைத்த ஆர்மலைப் பாட்டூர்
அண்ணல் என்போன் இயன்ற சேனை
முரசிரங்கும் தானையெதிர் முயன்ற
வெந்தருயிர் குருக்கும் வேலின் அன்னவன் ... [1]
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ யாப்பருங்கல விருத்தி மேற்கோள்