அகோகைட்டு
ஆக்சைடு கனிமம்
அகோகைட்டு (Akaogiite) என்பது மிகவும் அரிதான ஒரு கனிமமாகும். இது தைட்டானியம் ஈராக்சைடின் (TiO2) இயற்கை வடிவங்களில் ஒன்றாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கத்தின் கனிம குறியீடுகளின் பட்டியலில் இது Aka என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.[1]) அணாடேசு, புருக்கைட்டு, உயரழுத்த இரண்டாம் நிலை தைட்டானியம் ஈராக்சைடு ஆகியவற்றோடு இணைந்து இதுவும் தைட்டானியம் ஈராக்சைடின் ஓர் உயரழுத்த பல்லுருவாக்கமாகத் திகழ்கிறது.[2][3][4] உரூட்டைல் என்பது TiO2 இன் நிலையான பல்லுருவமாகும். இது பொதுவாக நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தங்களில் காணப்படுகிறது.
செருமன் நாட்டிலுள்ள விண்கல் பள்ளமான நார்ட்லிங்கர் ரைசு விண்கல்வீழ் பள்ளத்தில் அகோகைட்டை காணலாம். அங்கு விண்கல் தாக்கத்தின் போது ஏற்பட்ட தீவிர அழுத்தம் இதன் உருவாக்கத்தை அனுமதித்தது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ 2.0 2.1 El Goresy, A., Dubrovinsky, L., Gillet, P., Graup, G., and Chen, M., 2010: Akaogiite: An ultra-dense polymorph of TiO2 with the baddeleyite-type structure, in shocked garnet gneiss from the Ries Crater, Germany. American Mineralogist 95(5-6), 892-895
- ↑ 3.0 3.1 Mindat, Akaogiite, http://www.mindat.org/min-35912.html
- ↑ Mindat, TiO2 II, http://www.mindat.org/min-29114.html