தைட்டானியம் ஈராக்சைடு

தைட்டானியம் ஈராக்சைடு (Titanium dioxide), தைட்டானியம் (IV) ஆக்சைடு அல்லது தைட்டானியா எனவும் அழைக்கப்படும் தைட்டானியத்தின் ஆக்சைடு ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு TiO
2
ஆகும். நிறமியாக பயன்படுத்தப்படும் போது, இச்சேர்மம், தைட்டானியம் வெண்மை, வெண்ணிற நிறமி 6 (பிடபிள்யூ6), அல்லது சிஐ 77891 என அழைக்கப்படுகிறது. பொதுவாக, இச்சேர்மமானது இல்மனைட்டு, ரூடைல் மற்றும் அனாடேஸ் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இச்சேர்மம் வண்ணப்பூச்சு, சூரிய ஒளியிலிருந்து தோலைப் பராமரிக்கும் பூசுபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான நிறப்பொருட்கள் ஆகிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. உணவுக்கான நிறப்பொருளாக பயன்படுத்தும் போது இதற்கான எண் E எண் E171 என தரப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இச்சேர்மத்தின் தயாரிப்பானது 9 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது.[4][5][6] இச்சேர்மமானது அனைத்து நிறமிப்பொருட்களிலும் சேர்த்து மூன்றில் இரண்டு பாகம் பயன்படுத்தப்படுகிறது.[7]

தைட்டானியம் ஈராக்சைடு
Titanium(IV) oxide
The unit cell of rutile
பெயர்கள்
ஐயுபிஏசி பெயர்
தைட்டானியம் ஈராக்சைடு தைட்டானியம்(IV) ஆக்சைடு
இதர பெயர்கள்
தைட்டானியா

ரூடைல்

அனாடேசு

புரூகைட்டு
இனங்காட்டிகள்
3D model (JSmol)
ChEBI
ChEMBL
ChemSpider
ECHA InfoCard 100.033.327
E number E171 (colours)
KEGG
பப்கெம் <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
RTECS number XR2775000
UNII
பண்புகள்
TiO

2
வாய்ப்பாட்டு எடை 79.866 கி/மோல்
தோற்றம் வெண்ணிறத் திண்மம்
மணம் மணமற்றது
அடர்த்தி
  • 4.23 கி/செமீ3 (ரூடைல்)
  • 3.78 கி/செமீ3 (அனாடேசு)
உருகுநிலை 1,843 °செல்சியசு (3,349 °பாரன்ஃகைட்; 2,116 கெல்வின்)
கொதிநிலை 2,972 °செல்சியசு (5,382 °பாரன்ஃகைட்; 3,245 கெல்வின்)
கரைவதில்லை
பட்டை இடைவெளி 3.05 eV (rutile)[1]
காந்த ஏற்புத்திறன் (χ)
+5.9·10−6 cm3/mol
  • 2.488 (அனாடேசு)
  • 2.583 (புரூகைட்டு)
  • 2.609 (ரூடைல்)
வெப்பவேதியியல்
50 யூல்·மோல்−1·K−1[2]
−945 கிலோயூல்·மோல்−1[2]
தீ விளைவுகள்
Safety data sheet ICSC 0338
Not listed
NFPA 704
NFPA 704 four-colored diamondFlammability code 0: Will not burn. E.g., waterHealth code 1: Exposure would cause irritation but only minor residual injury. E.g., turpentineReactivity code 0: Normally stable, even under fire exposure conditions, and is not reactive with water. E.g., liquid nitrogenSpecial hazards (white): no code
0
1
0
எரிதல் வெப்பநிலை தீப்பற்றாதது
US health exposure limits (NIOSH):
PEL (Permissible)
TWA 15 mg/m3[3]
REL (Recommended)
Ca
IDLH (Immediate danger)
Ca [5000 mg/m3[3]
ஒத்த சேர்மங்கள்
இதர நேரயனிகள்
சிர்கோனியம் ஈராக்சைடு

ஆஃப்னியம் ஈராக்சைடு
ஒத்த தைட்டானியம் ஆக்சைடுகள்
தைட்டானியம்(II) ஆக்சைடு

தைட்டானியம்(III) ஆக்சைடு

தைட்டானியம்(III,IV) ஆக்சைடு
ஒத்த சேர்மங்கள்
தைட்டானிக் அமிலம்
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☒N verify (what is ☑Y☒N ?)
Infobox<span typeof="mw:Entity"> </span>references

இருப்பு

தொகு

தைட்டானியம் ஈராக்சைடு இயற்கையில் ரூடைல், அனாடேசு மற்றும் புரூக்கைட்டு ஆகிய கனிமங்களிலும், கூடுதலாக இரண்டு அதிக அழுத்த வடிவங்களான ஒற்றைச்சாய்சதுர பேடிலேயிட் போன்ற வடிவம் மற்றும் செஞ்சாய்சதுர α-PbO2போன்ற வடிவத்திலோ, இரண்டுமே பவேரியாவில் உள்ள விண்கல் வீழ் பள்ளங்களில் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று அகாவோகைட்டு என்ற மிக அரிய வகை கனிமம் ஆகும்.[8][9] இச்சேர்மமானது முக்கியமாக இல்மனைட்டு தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இல்மனைட்டே உலகில் டைட்டானியம் ஈராக்சைடினைத் தன்வசம் கொண்டுள்ள மிகவும் பரவிக்கிடக்கிற கனிமூலம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக ரூடைல் டைட்டானியம் ஈராக்சைடை தனது கனிமூலத்தில் 98% அளவிற்குக் கொண்டுள்ள கனிமூலம் ஆகும். அனாடேசு மற்றும் புரூக்கைட்டு ஆகியவை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் உள்ள அளவிற்கு 600–800 °C (1,112–1,472 °F) வெப்பப்படுத்துவதன் மூலமும் பெறப்படுகிறது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. Nowotny, Janusz (2011). Oxide Semiconductors for Solar Energy Conversion: Titanium Dioxide. CRC Press. p. 156. ISBN 9781439848395.
  2. 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-94690-7.
  3. 3.0 3.1 "Titanium dioxide". The National Institute for Occupational Safety and Health. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2019.
  4. "Titanium" in 2014 Minerals Yearbook. USGS
  5. "Mineral Commodity Summaries, 2015" (PDF). U.S. Geological Survey 2015.
  6. "Mineral Commodity Summaries, January 2016" (PDF). U.S. Geological Survey 2016.
  7. Schonbrun, Zach. "The Quest for the Next Billion-Dollar Color". https://www.bloomberg.com/features/2018-quest-for-billion-dollar-red/. 
  8. El Goresy, Ahmed; Chen, Ming; Gillet, Philippe; Dubrovinsky, Leonid; Graup, GüNther; Ahuja, Rajeev (2001). "A natural shock-induced dense polymorph of rutile with α-PbO2 structure in the suevite from the Ries crater in Germany". Earth and Planetary Science Letters 192 (4): 485. doi:10.1016/S0012-821X(01)00480-0. Bibcode: 2001E&PSL.192..485E. 
  9. Akaogiite. mindat.org
  10. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. pp. 1117–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்_ஈராக்சைடு&oldid=3946939" இலிருந்து மீள்விக்கப்பட்டது