அகோட்டா (Akota) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் வடோதரா[1] நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரப் பகுதியாகும். முற்காலத்தில் இப்பகுதி அனகோட்டாக்கா என்று அகோட்டா உருவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரி நதியின் கரையில் இதன் துணை நகரம் அமைந்துள்ளது.

அகோட்டா
Akota
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்பாவ்நகர்
ஏற்றம்56 m (184 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்8,049
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ-6

வடோதராவின் வளர்ச்சி பெற்றுவரும் மேற்குப் பகுதிகளில் ஒன்றாக, மிகப்பழமை வாய்ந்த இந்த அகோட்டா நகரமும் கருதப்படுகிறது. பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் அடங்கியுள்ள அகோட்டா நகரில், பெரிய பேரங்காடிகள் மற்றும் குசராத்து நகரின் சிறந்த உணவு விடுதிகள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோட்டா&oldid=2009892" இலிருந்து மீள்விக்கப்பட்டது