அக்கமாபாளையம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அக்கமாபாளையம்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள சிற்றூர். திருச்செங்கோட்டிலிருந்து கொக்கராயன்பேட்டை வழியாக ஈரோடு செல்லும் சாலையில் பத்தாம் கல் தொலைவில் விட்டம்பாளையம் என்னும் ஊர் உள்ளது. அவ்வூரில் இருந்து இடப்புறமாகப் பிரிந்து செல்லும் மண்பாதையில் ஒரு கல் தொலைவில் அக்கமாபாளையம் அமைந்துள்ளது. எர்ர கொல்ல என்னும் பிரிவைச் சேர்ந்த தொட்டிய நாயக்கர் சாதியினர் அதிகமாக வசிக்கின்றனர். அவர்கள் வழிபடும் பெண்தெய்வம் அக்கம்மா. ஆகவே அப்பெயரைச் சிறப்புக்கூறாகவும் பாளையம் என்பதைப் பொதுக்கூறாகவும் கொண்டு இவ்வூர்ப் பெயர் உருவாகி உள்ளது. கொங்கு வேளாளர், நாட்டுக் கவுண்டர், அருந்ததியர் ஆகிய சாதியினரும் இவ்வூரில் வசிக்கின்றனர். காவிரிப் பாசனம் ஓரளவுக்குக் கொண்ட ஊர் இது.