அக்கினிமித்திரன்

அக்கினிமித்திரன் (Agnimitra) (சமக்கிருதம்: अग्निमित्रः) (ஆட்சிக் காலம் கி மு 149 – 141), மௌரியப் பேரரசை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கன் நிறுவிய சுங்கப் பேரரசின் இரண்டாம் மன்னர் ஆவார். அக்கினிமித்திரன் கி மு 149-இல் சுங்கப் பேரரசின் மன்னரானார். வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணங்கள் அக்கினிமித்திரன் எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் எனக் கூறுகிறது.[1]

அக்கினிமித்திரன்
சுங்கப் பேரரசு
சுங்க ஆணின் சிற்பம், கி மு 2-1ஆம் நூற்றாண்டு
ஆட்சிகி மு 149 – 141
முன்னிருந்தவர்புஷ்யமித்திர சுங்கன்
பின்வந்தவர்வசுச்செயஸ்தா
வாரிசு(கள்)
  • வசுச்செயஸ்தா
தந்தைபுஷ்யமித்திர சுங்கன்
தாய்தேவமாலா

வாரிசுகள்

தொகு

கி மு 141-இல் அக்னிமித்திரனின் ஆட்சி முடிவுற்ற போது, அக்கினிமித்திரனின் மகன் வசுச்செயஸ்தா என்பவர் ஆட்சிக்கு வந்ததாக மச்ச புராணமும், சுச்ஜெயஸ்தா என்பவர் ஆட்சிக்கு வந்ததாக வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணங்கள் குறிப்பிடுகிறது[1]

மேலும் படிக்க

தொகு
  • Indigenous States of Northern India (Circa 200 BC to 320 AD) by Bela Lahiri, University of Calcutta,1974.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Lahiri, Bela (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.) Calcutta: University of Calcutta, pp.47-50
முன்னர் சுங்கப் பேரரசு
கி மு 149–141
பின்னர்
வசுச்செயஸ்தா

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கினிமித்திரன்&oldid=4062316" இலிருந்து மீள்விக்கப்பட்டது