அக்சாய் சின்

அக்சாய் சின் (Aksai Chin) என்பது இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் வடமேற்கில் உள்ள நிலப்பகுதியாகும். இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது. இந்தியாவினால் உரிமை கோரப்படும் இதனை இப்பகுதி தற்சமயம் சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. மிகக் குறைவான மக்களே வசிக்கும் இந்தப் பகுதி 1947-இல் சம்மு காசுமீர் இந்தியாவுடன் இணைந்த போது, அதிகாரப்பூர்வமாக இந்தியவுடன் இணைந்தது. ஆனால் இந்திய-சீன எல்லைக் கோடான மக்மோகன் கோட்டினை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. அக்சாய் சின்னை தனக்கு சொந்தமான பகுதியாகவே கருதியது. எல்லைத் தகராறு பெரிதாகி 1962ல் இந்திய சீனப் போராக வெடித்தது. இதில் சீனா வெற்றி பெற்ற பின்னர் இப்பகுதி முழுவதும் சீன அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. தற்போது இதன் வழியாக சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தையும் திபெத்தையும் இணைக்கும் சாலையைச் சீன அரசு அமைத்துள்ளது.[1]

சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ள அக்சாய் சின்
தரீம் ஆற்றுப்படுகை, அக்சாய் சின்

மேற்கோள்கள்

தொகு
  1. India-China Border Dispute
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சாய்_சின்&oldid=2974243" இலிருந்து மீள்விக்கப்பட்டது