அக்னி ஆறு (Agniaru) புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓடும் ஆறாகும். அக்னி ஆற்றுப்படுகையின் வடக்கே காவிரி ஆற்றுப் படுகையும் தெற்கே பாம்பாற்றுப் படுகையும் உள்ளன. அக்னி ஆறு, அம்புலி ஆறு, வெள்ளாறு ஆகிய மூன்றும் அக்னி ஆற்றுப்படுகையின் முக்கிய ஆறுகளாகும். 80கி.மீ நீளம் கொண்டது இந்த ஆறு. நரியாறு-I, நரியாறு-II, மற்றும் மகாராஜா சமூத்திரம் ஆகியவை இதன் துணையாறுகளாகும்.[1]. தமிழக நதிநீர் இணைப்புத் திட்டத்தின்படி காவிரியுடன் இந்த ஆற்றை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "இந்திய திட்டக்குழு" (PDF). Archived from the original (PDF) on 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி_ஆறு&oldid=3540391" இலிருந்து மீள்விக்கப்பட்டது