அக்பர் கக்கட்டில்

மலையாள எழுத்தாளர்

அக்பர் கக்கட்டில், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் கேரள இலக்கிய மன்றமான கேரள சாகித்திய அகாடெமியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.[1]

அக்பர் கக்கட்டில்

வாழ்க்கை

தொகு

இவருக்கு ஜமீலா என்ற மனைவியும், சித்தாரா, சுகானா ஆகிய மகள்களும் உள்ளனர். இவரது பெற்றோர் அப்துல்லா, குஞ்ஞமீனா ஆவர். இவர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கட்டில் என்ற ஊரில் 1954ஆம் ஆண்டில் பிறந்தார். பின்னர், பாறையில் எல்.பி பள்ளியிலும், வட்டோளி சமஸ்கிருத உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். அதன் பின்னர் மடப்பள்ளியில் உள்ள அரசுக் கல்லூரியில் பயின்றார். தலச்சேரியில் உள்ள அரசின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பி.எட். முடித்தார்.[1]

ஆக்கங்கள்

தொகு

இவர் வடக்குநின்னொரு குடும்ப விருதாந்தம், மிருத்யு யோகம், ஸ்த்ரைணம், ஹரிதபகல்கபுரம் ஆகியவற்றை எழுதியுள்ளார்.[1]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்பர்_கக்கட்டில்&oldid=3784267" இலிருந்து மீள்விக்கப்பட்டது