அக்ரினியரைட்டு
அக்ரினியரைட்டு (Agrinierite) என்பது (K2(Ca,Sr)(UO2)3O3(OH)2•5H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். யுரேனியப் படிவுகளின் ஆக்சிசனேற்ற மண்டலத்தில் பெரும்பாலும் அக்ரினியரைட்டு காணப்படுகிறது. பொதுவாக இக்கனிமம் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. 1928 முதல் 1971 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்த பொறியாளர் என்றி அக்ரினியர் நினைவாக கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது. இவர் பிரான்சு நாட்டின் அணுசக்தி ஆணையத்தின் கனிமவியல் ஆய்வகத்தில் பொறியாளராகப் பனிபுரிந்தார்.
அக்ரினியரைட்டு Agrinierite | |
---|---|
[[Image:|240px]] | |
வகை | கனிமம் |