அக்ரீ-ரோசனெயிம் வினை
அக்ரீ-ரோசனெயிம் வினை (Acree-Rosenheim reaction) என்பது புரதங்களில் திரிப்டோபான் இருப்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனச் சோதனை ஆகும். ஒரு புரத கலவையுடன் பார்மால்டிகைடு கலக்கப்பட்டு அதனுடன் அடர் கந்தக அமிலம் சேர்க்கப்பட்டு இரண்டு அடுக்குகள் உருவாகின்றன. சோதனை நேர்மறையானதாக இருந்தால் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் ஒரு ஊதா வளையம் தோன்றும். [1][2][3]
உயிர் வேதியியலின் இரண்டு அறிஞர்களின் பெயரால் இந்த சோதனைக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. அதாவது சான் ஆப்கின்சுபல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற அமெரிக்க உயிர் வேதியியலாளர் சாலமன் பார்லி அக்ரீ (1875-1957) மற்றும் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலோ-செருமானிய மருத்துவ வேதியியலாளர் சிக்மண்ட் ஓட்டோ ரோசனெயிம் (1871-1955) ஆகியோர் இவ்விரு அறிஞர்களாவர்.
வரலாறு
தொகுசெருமன் பிரித்தானிய வேதியியலாளர் ஓட்டோ எக்னெரின் (1853-1924) முறைகளை ஆராய்ந்து கொண்டும் மேம்படுத்திக்கொண்டும் இருந்த நேரத்தில் ஓட்டோ ரோசனெயிம் என்பவரால் இந்த முறை முதலில் ஆராயப்பட்டது. இது கந்தக அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் பாலில் பார்மால்டிகைடு இருப்பைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இது நீல நிற வளையத்தை உருவாக்கியது. ஆதாம்கைவிக்சு வினையுடன் இவ்வினையின் ஒற்றுமைகள் மற்றும் கேசின் சேர்மத்தில் குறிப்பிடத்தக்க வகையில் அதிக வினை இருப்பதை அக்ரீ கவனித்தார்.[4] இந்த 1906 ஆம் ஆண்டு ஆராய்ச்சியின் அடிப்படையில், அனைத்து வகையான புரதங்களுடனும் பார்மால்டிகைடு வினைகள் என்ற பொதுவான சூழலில் 1907 ஆம் ஆண்டில் இவ்வினையை அக்ரி ஆராய்ந்தார். மேலும் பாலில் உள்ள கேசீனில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வினையில் திரிப்டோபான் குழுவின் முக்கியத்துவத்தை முதலில் கண்டறிந்தார்.[5]
வினை
தொகுதிரிப்டோபான் சேர்மத்துடன் பார்மால்டிகைடு புரியும் வினையை இங்கு காணலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Debajyoti Das (1980). Biochemistry. Academic Publishers. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80599-17-5.
- ↑ Louis Rosenfeld (2 December 2012). Origins of Clinical Chemistry: The Evolution of Protein Analysis. Elsevier. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-15292-1.
- ↑ B. Jain Publishers Staff (1 January 1999). Pocket Medical Dictionary. B. Jain Publishers. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7021-193-8.
- ↑ A COLOUR REACTION OF FORMALDEHYDE WITH PROTEIDS AND ITS RELATION TO THE ADAMKIEWICZ REACTION,published in biochemistry journal,1906
- ↑ THE CHEMISTRY OF HEHNERS TEST FOR FORMALDEHYDE IN MILK,1907