அக்ரெல்லைட்டு
ஒற்றைச் சங்கிலி இனோ சிலிக்கேட்டு
அக்ரெல்லைட்டு (Agrellite) என்பது NaCa2Si4O10F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் அக்ரெல்லைட்டு கண்டறியப்பட்டது. வேறு சில இடங்களிலும் இக்கனிமம் இருப்பதாக அறியப்படுகிறது.
அக்ரெல்லைட்டு Agrellite | |
---|---|
புற ஊதா ஒளியில் அக்ரெல்லைட்டு ஒளிர்கிறது | |
பொதுவானாவை | |
வகை | இனோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | NaCa2Si4O10F |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை, சாம்பல் வெண்மை,பசுமை கலந்த வெண்மை |
படிக இயல்பு | செவ்வக வடிவ தாங்கு சட்டம் |
படிக அமைப்பு | முச்சரிவு |
பிளப்பு | சரி பிளவு [110] |
மோவின் அளவுகோல் வலிமை | 5.5 |
மிளிர்வு | முத்து போன்றது |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 2.88 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு |
ஒளிவிலகல் எண் | nα = 1.567 nβ = 1.579 nγ = 1.581 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.014 |
மேற்கோள்கள் | [1][2] |
புற ஊதாகதிரின் குறுகிய அலைநீளம் மற்றும் நீண்ட அலைநீளம் இரண்டிலுமே இளஞ்சிவப்பு நிற ஒளிர்தலை இது வெளிப்படுத்துகிறது[3].
1913 முதல் 1996 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த கனிமவியலாளர் சிடூவர்ட் ஒலோப் அக்ரெல் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.mindat.org/min-57.html Mindat
- ↑ http://www.webmineral.com/data/Agrellite.shtml Webmineral
- ↑ Handbook of Mineralogy
- ↑ first reported in the Canadian Mineralogist (1976), vol. 14, pp. 120-126