அங்குசம் என்பது யானையைக் கட்டுப்படுத்த யானைப்பாகர் பயன்படுத்தும் ஆயுதமாகும். இந்துத் தொன்மவியலில் பல கடவுளர் அங்குசத்தை வைத்துள்ளார்கள். விநாயகர், பைரவர், சதாசிவ மூர்த்தி, துர்க்கை ஆகியோர் இந்த ஆயுதத்தினை வைத்துள்ளார்கள். துரக்கோலின் மேற்பகுதியில் கொக்கியோடு இக்கருவி அமைந்திருக்கும். இந்த ஆயுதத்தினை துறட்டி என்பார்கள். இந்த ஆயுதம் வசப்படாத பொருளை வளைத்து வசப்படுத்தும் கருவியாக கொள்ளப்படுகிறது.[1] இந்த ஆயுத்ததின் சக்தியாக வசியம் கருதப்படுகிறது. உயிர்களின் ஆனவத்தை அடக்கி உயிர்களை வசப்படுத்துதல் இந்த ஆயுதத்தின் தன்மையாகும்.

17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அங்குசம்
கணபதி தன்னுடைய வலது மேற்கையில் வைத்திருக்கும் அங்குசம்

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. சிற்பச் செந்நூல் - வை. கணபதி ஸ்தபதி - தொழில் நுட்ப கல்வி இயக்கம் , தமிழ்நாடு - பக்கம் 126, 127

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்குசம்&oldid=3180056" இலிருந்து மீள்விக்கப்பட்டது