அசன் (Asan) தென் கொரியாவிலுள்ள ஒரு நகரம் ஆகும். இது தென்கொரியாவின் 'சுங் சியாங்' மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் சியோல் நகரம் அமைந்துள்ளது.இந்நகரம் வென்னீர் ஊற்றுக்களுக்குப் பிரபலமானது. இங்கு சராசரியாக 2,50,000 மக்கள் வசிக்கின்றனர். 'க்யோங்கி' மாகாணத்திலுள்ள 'அன்சான்' நகரும் இதுவும் ஒன்றல்ல.[1][2][3]

அசன்
தென் கொரியா
தென் கொரியா
நாடு தென் கொரியா
பரப்பளவு
 • மொத்தம்542.25 km2 (209.36 sq mi)
மக்கள்தொகை
 (2008.07.31)
 • மொத்தம்2,42,575
 • அடர்த்தி442/km2 (1,140/sq mi)
 • 
Chungcheong

போக்குவரத்து

தொகு

அசன் நகரானது அதிவேக தொடர்வண்டிச் சேவையால் அருகிலுள்ள நகரங்கள்உடன் இணைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து சியோல் நகருக்குச் செல்ல 30 நிமிடங்கள் ஆகும்.இன்சியான் விமான நிலையம் இதிலிருந்து 2 மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு அதிவேக சாலைகளான சியோல்-புஸன் சாலை மற்றும் மேற்குக் கடற்கரைச் விரைவுச்சாலை ஆகியன இந்நகரின் வழியாகச் செல்கின்றன.

தொழில்துறை மற்றும் வர்த்தகம்

தொகு

14 வர்த்தக மற்றும் தொழிற்பேட்டைகள் இந்நகரில் அமைந்துள்ளன. யுயேண்டே தானுந்து நிறுவனம் , சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்நகரில் செயல்படுகின்றன. இந்நகரம் போக்குவரத்து மற்றும் மின்னணுவியல் தொழிற்சாலைகளை அதிகம் கொண்டது. கிழக்கு சீனாவின் துறைமுகம் இந்நகரின் அருகில் அமைந்துள்ளது.

கல்வி நிறுவனங்கள்

தொகு
  • அசன் தகவல் தொழில்நுட்பப் கல்லூரி
  • சியோனம் பல்கலைக்கழகம்
  • சூன்சுங்ஹியாங் பல்கலைக்கழகம்
  • சன் மூன் பல்கலைக்கழகம்
  • ஹோஸியோ பல்கலைகழகம்

முக்கிய ஆட்கள்

தொகு

தென் கொரியாவின் முன்னாள் தலைவர் 'யுன் போ சியோன்' இந்நகரைச் சார்ந்தவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "지중해마을". 아산시 문화관광 (in கொரியன்). Archived from the original on 22 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
  2. "溫陽華僑小學校." International School Information, Government of South Korea. Retrieved on 30 March 2016. "58 Samdong-ro 28beon-gil, Asan-si, Chungcheongnam-do, 336–802, Korea"
  3. lee, jinhak (30 March 2016). "wooribank basketball team move homeground to Asan". http://www.ggilbo.com/news/articleView.html?idxno=275490. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசன்&oldid=3752036" இலிருந்து மீள்விக்கப்பட்டது