அசாதாரணமான கருப்பை இரத்தப்போக்கு

மருத்துவ நோயியல் நிலை

அசாதாரணமான கருப்பை இரத்தப்போக்கு (Abnormal uterine bleeding) என்பது கருப்பையிலிருந்து அடிக்கடி, நீட்டித்தகாலத்திற்கு, வழக்கத்தைவிட அதிகமான அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதைக் குறிக்கிறது.[1][3]கருத்தரிக்கும் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு இவ்வகையில் சேராது..[3] இரும்புச் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்தசோகை காரணமாகக்கூட அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படலாம். இது வழக்கமான வாழ்வியல் முறையை வெகுவாக எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும். [2]

அசாதாரணமான கருப்பை இரத்தப்போக்கு
ஒத்தசொற்கள்Dysfunctional uterine bleeding (DUB), abnormal vaginal bleeding
சிறப்புமகளிரியல்
அறிகுறிகள்Irregular, abnormally frequent, prolonged, or excessive amounts of uterine bleeding[1]
சிக்கல்கள்இரத்த சோகை[2]
காரணங்கள்கருமுட்டை வெளிப்பாடு problems, fibroids, lining of the uterus growing into the uterine wall, uterine polyps, underlying bleeding problems, side effects from birth control, cancer[3]
நோயறிதல்Based on symptoms, blood work, medical imaging, hysteroscopy[2]
ஒத்த நிலைமைகள்Ectopic pregnancy[4]
சிகிச்சைHormonal birth control, GnRH agonists, tranexamic acid, NSAIDs, surgery[1][5]
நிகழும் வீதம்Relatively common[2]

கருப்பை நார்த்திசுக் கட்டி, கருப்பைச் சுவரின் அகப்படலம் வளருதல்,கருப்பைப் பிரச்சனைகள், மாதவிடாய்ச் சிக்கல்கள், உள்ளுறுப்புகளில் இரத்தம் ஒழுகுதல், சினை முட்டை வருவதில் பிரச்சினை, குடும்பக்கட்டுப்படு அல்லது புற்றுநோயின் பக்கவிளைவுகள் ஆகியவை உள்ளிட்ட கருவூலகத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகள் அசாதாரண இரத்தப்போக்கிற்குக் காரணமாக இருக்கலாம்.[3] தனி ஒருவருக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணமாகவோ அல்லது மேற்கண்டவற்றில் சிலவோ அசாதாரண இரத்தப்போக்கிற்குக் காரணமாக அமையலாம். [3] இதன் முதல்படியாக கட்டி அல்லது கரு அகற்றப்படுகிறது.[5][3] மருத்துவப்படமெடுத்தல் அல்லது கருப்பை அகநோக்குதல் மூலம் இதனைக் கண்டறிய உதவலாம். [2]

ஒவ்வொரு விளைவுகளும் ஏற்படும் அடிப்படைக் காரணத்திற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.[3][2] இயக்குநீர்முறை கருத்தடை, கோனடாட்ராபின் - முதன்மை இயக்கியை தூண்டுதல், டிரானெக்சாமின் அமிலம் ஆகியனவும், அறுவை சிகிச்சை மூலம் கட்டியை நீக்குதல், அல்லது கருப்பை அகற்றுதல் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகின்றன.[1][5] இனப்பெருக்க வயதிலுள்ள 20 விழுக்காடு பெண்களுக்கு அசாதாரண இரத்தப்போக்கு காணப்படுகிறது.[2]

References

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Abnormal Uterine Bleeding". ACOG. March 2017. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Abnormal uterine bleeding". Best Pract Res Clin Obstet Gynaecol 34: 54–65. July 2016. doi:10.1016/j.bpobgyn.2015.11.012. பப்மெட்:26803558. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Bacon, JL (June 2017). "Abnormal Uterine Bleeding: Current Classification and Clinical Management.". Obstetrics and Gynecology Clinics of North America 44 (2): 179–193. doi:10.1016/j.ogc.2017.02.012. பப்மெட்:28499529. 
  4. "Vaginal Bleeding". Merck Manuals Professional Edition. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
  5. 5.0 5.1 5.2 Cheong, Y; Cameron, IT; Critchley, HOD (1 September 2017). "Abnormal uterine bleeding.". British Medical Bulletin 123 (1): 103–114. doi:10.1093/bmb/ldx027. பப்மெட்:28910998.